கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ரஜினி
Page 1 of 1
கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ரஜினி
“பெருமான் ரஜினிகாந்த்” என்ற பெயரில் புதிய படம் சில மாதங்களுக்கு முன்
தயாரானது. இப்படத்தை ராஜேஷ்கண்ணா இயக்கினார். இவர் ரஜினி நடித்த “பாபா”
படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். புதுமுகங்கள் அர்ஜூன், ஸ்ருதி
நாயகன், நாயகிகளாக நடித்தனர். ரஜினியை பற்றி படத்தில் எந்த காட்சியும்
இல்லை என்றும் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அவர் பெயரை தலைப்பில்
இணைத்தோம் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.
அந்த பெயரில் போஸ்டர்கள் அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டப்பட்டன. இதுபற்றி
ரஜினி கவனத்துக்கு வந்தது. தனது பெயரில் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை.
தலைப்பை மாற்றும்படி கூறி விட்டார். எதற்காக தனது பெயரை நீக்கும்படி
கூறினார் என்று புரியாமல் இருந்தது.
தற்போது ரஜினி ரசிகர்மன்ற தலைவர் சுதாகர், படத்தின் தயாரிப்பாளருக்கு
ரஜினி சார்பில் எழுதிய கடிதம் மூலம் அதன் காரணம் தெரிய வந்துள்ளது. சுதாகர்
எழுதிய கடிதத்தில், “பெருமான் என்பது கடவுளை குறிப்பதாகவும், தனது பெயரை
பெருமான் பெயரோடு சேர்ப்பது தவறாக அமைந்து விடும். கடவுள் உயர்ந்தவர்.
அவரோடு என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரஜினி தெரிவித்தார். எனவே படத்தின்
தலைப்பில் இருந்து ரஜினி பெயரை நீக்கி விடுங்கள்” என்று குறிப்பிட்டு
உள்ளார்.
“இறைவனை விட பெரியவன் யாரும் இல்லை. கடவுளோடு தன்னை ஒப்பிட வேண்டாம்” என
ரஜினி கூறியதால் தலைப்பு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது
குறித்து இயக்குனர் ராஜேஷ்கண்ணா கூறும் போது, “நானும் படத்தின் இணை
தயாரிப்பாளர் பிருந்தாவும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் மூலம் ரஜினியை
சந்தித்தோம்.
அப்போது அவர் எங்களிடம் பெருமான் என்பது கடவுளை குறிக்கும். எனவே என்
பெயரை தலைப்பில் வைக்க வேண்டாம் என்றார். அவரை புண்படுத்த வேண்டாம் என
தலைப்பை மாற்றி விட்டோம்” என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம்: சோனியா அகர்வால்
» சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்! – மம்முட்டி
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா
» என்னை கடவுளாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்
» ‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum