தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ்

Go down

‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ் Empty ‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ்

Post  ishwarya Wed Apr 03, 2013 6:15 pm

‘உயிரெழுத்து’ படவிளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம்: ராகவா லாரன்ஸ் C1bc6e90-e3ee-4890-a470-a2e56a2cc573_S_secvpf.gif1இயக்குனர்
ஆர்.சுந்தரராஜன் இயக்கும் படம் ‘உயிரெழுத்து’. இப்படம் கடந்த 12
வருடங்களாகியும் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் சமீபத்தில்
வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ராகவா லாரன்ஸை ஹீரோவாக முன்னிலைப்படுத்தி
போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது,

நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் இயக்குனர்களில்
ஆர்.சுந்தரராஜன் அவர்களும் ஒருவர். அவரது இயக்கத்தில் 12 வருடங்களுக்கு
முன்பு ‘உயிரெழுத்து’ படத்தில் நடித்தேன். நான் ஏற்கெனவே நடித்த
அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அற்புதம் போன்ற படங்களைப் போன்றுதான்
இந்த படத்திலும் ஹீரோவின் நண்பனாக ஒரு சில காட்சிகளிலும், ஒரே ஒரு பாடல்
காட்சியிலும் நடித்திருந்தேன். நான் ஹீரோ இல்லை.

ஆனால் சமீபத்தில் உயிரெழுத்து படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்களில்
நான்தான் ஹீரோ என்பது போன்று பிரதானப்படுத்தப்பட்டிருப்பது எனக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை சந்திக்கிற நண்பர்களும் இப்படத்தில்
எப்பொழுது நடித்தீர்கள் என்று கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல
முடியவில்லை. ஆகவே, இனி ‘உயிரெழுத்து’ விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த
வேண்டாம்.

என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum