தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம்: சோனியா அகர்வால்

Go down

செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம்: சோனியா அகர்வால் Empty செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம்: சோனியா அகர்வால்

Post  ishwarya Fri Apr 12, 2013 5:19 pm

பிரபல இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள். செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். சோனியா அகர்வால் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கதாநாயகியாக நடித்து வரும் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் செல்வராகவனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து சோனியா அகர்வால் கூறியதாவது;

‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என் சொந்த கதை அல்ல என பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து தவறான செய்திகள் வருகிறது.

அப்படத்தில் செல்வராகவனைப் பற்றி எந்த காட்சியும் வரவில்லை. அவரைப் பற்றி குறிப்பிடவும் இல்லை. எனது வாழ்க்கையை படமாக்கும் அளவுக்கு அதில் பரபரப்பான சம்பவங்கள் ஏதும் இல்லை. எனது வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கவேண்டிய அவசியமும் இல்லை.செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம்.

‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தின் கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரு நடிகையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதில் காட்சிபடுத்தப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அதில் சொல்லவில்லை. எல்லா நடிகைகள் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அதில் இருக்கும்.” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum