தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடுக்கடலில் இளசுகளின் பாடல்!

Go down

 நடுக்கடலில் இளசுகளின் பாடல்! Empty நடுக்கடலில் இளசுகளின் பாடல்!

Post  ishwarya Tue Apr 09, 2013 1:14 pm

வாழ்க்கையில் தவறு செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள், செய்யப்
போகிறவர்கள்.. இவர்களை மையப்படுத்தி ‘இளசுகள்’ என்ற துடிப்பான தலைப்பின்
மூலம் ஒரு துடிப்பான காதல் கதையை இயக்குகிறார் புதுமுக இயக்குநர் கமல்
ஆதித்யா. ஸ்ரீ கனகதுர்கா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு
ஜி.ராம் என்பவர் இசையமைக்கிறார். இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின்
இசை குருவான இசைமேதை டி.வி.போபாலகிருஷ்ணனின் மகன் ஆவார்.


இளையராஜாவிடம் பணிபுரிந்த இவர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரபல எழுத்தாளர் களக்காடு ராஜசேகர்
இப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
“மன்மதன் கோட்டை மன்மதன் மந்திர பூஜை நடக்கிறதே…” என்ற க்ளைமாக்ஸ் பாடலை,
நடுக்கடலில் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக 4 கேமிராவும், 5 படகுகளும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில், பிரபு என்பவர் ஹீரோவாக
அறிமுகமாகிறார். பெங்களு‘ரைச் சேர்ந்த சுஷ்மா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி
மற்றும் மராட்டியப் படங்களில் நடித்த புனே நடிகை ஆக்கா, முக்கிய வேடத்தில்
நடிக்கிறார். இவர்களுடன் ஜி.கே, சீதா, ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி கமல் ஆதித்யா இயக்குகிறார். பீம பிரகாஷ்
ஒளிப்பதிவு செய்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum