சென்னை சர்வதேச பட விழாவை குலுக்கிய ‘செங்கடல்’ போராட்டம்!
Page 1 of 1

‘சொல்லாமலே
அனைத்து வைக்கும் திரை ரசிகர்கள் கூடும் இடம் தான் திரைப்பட விழாக்கள்.
ஆனால் சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழாவில், அரங்குக்கு உள்ளே
கோஷங்களை எழுப்பி போர்க்கொடி தூக்கி, கவனத்தை ஈர்த்தது, ‘செங்கடல்’ குழு!
சென்னை 9வது சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் தியேட்டரில் புதன்கிழமை இரவு நடந்தது.
செய்தி மற்றும் சிறப்புப்பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர்
கே.டி.ராஜேந்திர பாலாஜி, தென்னிந்திய நடிகர் சங்கத் தலிவரும், சட்டமன்ற
உறுப்பினருமான சரத்குமார், இந்தி திரைப்பட இயக்குநர் சேகர் கபூர், ‘ஹிண்டு’
ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
‘ஹிண்டு’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம் பேசும்போது, “இந்திய அரசியலமைப்பு
சட்டம் 19(1)ன் பிரிவு பேசுவதற்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்குமான
உரிமையையும், சுதந்திரத்தையும் அளிக்கிறது,” என்று விரிவாகவும் தெளிவாகவும்
சினிமாவிலும் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தினார்.
இயக்குனர் சேகர் கபூரை மேடையில் பேச அழைத்த போது, அரங்கில்
அமர்ந்திருந்த இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் எடிட்டர் பி. லெனின்
உள்ளிட்ட சிலர் ‘தணிக்கை செய்த படத்தை மறு தணிக்கை செய்யாதே!’ ‘இந்தியன்
பனோரமாவில் தேர்வான செங்கடல் படத்தை திரையிடு திரையிடு!’ என்று கோஷம்
எழுப்பினர்.
பிரச்சனைக்கான காரணம் என்னவென்றால், செங்கடல் திரைப்படம்
இவ்விழாவின் பட்டியலில் இடம் பெறாததுதான். பிரபல ஆவணப்பட
இயக்குனரான லீலா மணிமேகலை இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் தமிழக
இலங்கை கடலோர பிரச்சனையையும் மையமாக வைத்து தமிழக அரசியலையும்
சேர்த்து எடுத்த படம்தான் ‘செங்கடல்’. பிரான்ஸ், கோவா உள்ளிட்ட
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட தமிழர்களின் பிரச்சனை
குறித்து பேசும் இப்படத்தினை தமிழ்நாட்டில் நடக்கும் சர்வதேச
விழாவில் திரையிடாத்து ஏன் என்ற கேள்வியை முன்வத்து கோஷங்கள்
எழுப்பினர்.
அரங்கம் முழுவதும் ஆச்சர்யத்தோடு உரிமைக்குரல் எழுப்பிய திசை
திரும்பியதும், சரத்குமார் லெனின் அருகில் வந்து “உங்கள் கோரிக்கையைப்
பாராட்டுகிறேன். விரைவில் இந்த் பிரச்னை தீர்க்கப்படும். நாம் எல்லோரும்
ஒன்று சேர்ந்து செங்கடல் படத்தைத் திரையிட்டுப் பார்க்கலாம்,”என்றார்.
பிறகு, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த திருப்தியுடன் வெளியேறியது,
‘செங்கடல்’ குழு.
இது குறித்து படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையிடம் கேட்டதற்கு,
“சர்வதேச திரைப்பட விழாவில் தணிக்கை என்ற சொல்லுக்கே இடமில்லை. ஆனால்
அவ்வாறு சொல்லிக்கொண்டு இப்படத்தை தடை செய்வது எவ்விதத்திலும்
ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கு
இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. பல நாடுகளில் இப்படம்
திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இப்படம்
திரையிடப்படவில்லை என்றால் இதைவிட படைப்பாளிகள் சுதந்திரத்தைப் பற்றி
பேச யாருக்கும் இங்கு அருகதையில்லை என்று சொல்லுவேன்,” என்று
கொந்தளிக்கிறார்.
இப்பிரச்னையில் சமாதானம் செய்த சரத்குமாரிடம் ‘செங்கடல்’ பிரச்னை
குறித்து நாம் கேட்டதற்கு, “இதுபற்றி கமிட்டிதான் முடிவெடுக்கும். நான்
கமிட்டியில் இல்லை. இந்தோ சினி அப்ரீசியேஷன் ஃபவுண்டேஷன் தான் திரைப்பட
விழாவை நடத்துகிறது. நாளைக்குள் முடிவெடுத்துவிடுவார்கள். அமைசசர் போன்ற
பலர் வந்திருக்கின்றனர். நிகழ்ச்சி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்
தலையிட்டுப் பேசினேன்,”என்று ஒதுங்கிக் கொண்டார்.
சென்னை சர்வதேச பட விழாவில் ‘செங்கடல்’ புறக்கணிப்பு விவகாரம்
வலுவடைந்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முடிவை
மறுபரிசீலனை செய்வார்களா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன்
» டிசம்பர் 13 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா
» சென்னை சர்வதேச திரைப்பட விழா - திரையரங்குகள் விவரம்
» சென்னை சர்வதேச பேஷன் வாரம்-அழகிகள் தேர்வு
» நாளை உண்ணாவிரத போராட்டம்: நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum