தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!

Go down

அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!! Empty அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:03 pm

மற்ற இயக்குனர்களின் சம்மதத்துடன் கோச்சடையானில் நடிக்கலாம் என்று
இருந்தேன்; அதுக்குள்ள என்னை மாற்றிவிட்டார்களே… என்று நடிகை சினேகா வேதனை
தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகை
சினேகா, தற்போது விடியல், முரட்டுக்காளை என இரு தமிழ் படங்களிலும்
ஜோஸட்டன்டே ஹீரோ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களில்
நடித்து முடித்ததும் திருமணம் செய்யவிருப்பதாக ஏற்கனவே சினேகா ஒரு
பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படத்தில், ரஜினியின் தங்கையாக
நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்தது. இதனால் திருமண தேதி
தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், சினேகாவை நீக்கிவிட்டு
ருக்மணியை தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து சினேகா அளித்துள்ள பேட்டியில், கோச்சடையான் படத்தில்
நடிக்க கால்ஷீட் பிரச்னைகள் இருந்தன. நான் நடிக்கும் மற்ற படங்களின்
இயக்குனர்கள் சம்மதத்துடன், கோச்சடையான் படத்தில் நடிக்கலாம் என்று
இருந்தேன். ஆனால் அதற்குள் என்னை மாற்றிவிட்டனர், என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum