தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

Go down

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது  ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது.  சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந Empty சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

Post  amma Fri Apr 05, 2013 5:16 pm



ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது.

சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகின்றன.

இந்த பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 14–ந் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரக கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

வெள்ளிக்கிழமைமுதல் 9–ந் தேதி வரை பிரெஞ்சு தூதரகத்திலும், 10–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை ரட்லன்ட் கேட்டில் உள்ள ஜெர்மன் தூதரகத்திலும் ஐரோப்பிய பட விழா நடைபெற இருக்கிறது. மொத்தம் 24 நாடுகளை சேர்ந்த 24 படங்கள் திரையிடப்படுகின்றன.

14–ந் தேதி அன்று நிறைவு விழாவையொட்டி கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் டைரக்டர்கள் சுஹாசினி மணிரத்னம், ஜானகி விஸ்வநாதன், சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum