இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா: சென்னையில் நடக்கிறது
Page 1 of 1

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் தென்ந்திய சூப்பர் ஸ்டார்களான, ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், அம்ப்ரீஷ் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதுகுறித்த பேச்சுவார்த்தை பிலிம்சேம்பரில் திங்கட்கிழமை நடக்க இருக்கிறது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் கூறியதாவது: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்த முக்கியமான நிகழ்வை தென்னிந்திய சினிமா துறை தொடங்கி வைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி ஏப்ரல் 26, 27, 28ம் தேதிகளில் விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். விழா தொடக்கத்தில் திரைப்பட உருவாக்கம் பற்றிய பயிற்சிபட்டறை நடத்த பேசிவருகிறோம். மாலையில் நடனம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். கடைசி நாளன்று இந்திய சினிமாவின் முக்கியமான முகங்கள் பங்குபெறும் வகையில் விழாவை நடத்த இருக்கிறோம். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் விழா நடைபெறும். தற்போது அங்கு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சரியான நேரத்தில் அரங்கம் கிடைக்க உதவுமாறு கேட்க உள்ளோம். அப்படி கிடைக்கவில்லை என்றால் ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விழாவை நடத்துவோம். இருந்தாலும் சென்னையில் நடத்தவே முக்கியத்துவம் கொடுப்போம். இவ்வாறு கல்யாண் கூறினார். இந்த விழாவில் தென்னிந்திய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், அம்பரீஷ், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். விழா நடக்கும் நாட்களில் படப்பிடிப்புகள் நடைபெறாது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!!
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா.
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா: கலைஞர்கள் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum