தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு

Go down

கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு Empty கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு

Post  ishwarya Tue Apr 02, 2013 1:04 pm

சிவாஜி நடித்து 1964-ல் ரிலீசான கர்ணன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ந்தேதி மறு வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளது. மொத்தம் 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. 35 தியேட்டர்களில் 25 நாட்களும் 14 தியேட்டர்களில் 50 நாட்களும், 3 தியேட்டர்களில் 75 நாட்களும் சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப் தியேட்டர்களில் 100 நாட்களும் ஓடின.

தற்போது சத்யம் தியேட்டரில் 150 நாட்களாக தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறது. 48 வருடம் கழித்து 150 நாட்கள் ஓடிய இதன் வெற்றி விழா நிகழ்ச்சி அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் இன்று மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது.

சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன் தலைமை தாங்குகிறார். சாந்தி சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். இயக்குனர் பி.வாசு, நடிகை ராதிகா, மருது மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். நடிகர் பிரபு விழாவில் கலந்து கொண்டு கர்ணன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார்.

பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கிறார். மதுவந்தி அருண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு கிறார். சிவாஜி மன்ற செயலாளர் சி.எஸ். குமார் நன்றி கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவாஜியின் கர்ணன் படம் 100-வது நாள் விழா: 48 வருடத்துக்கு பிறகு மீண்டும் சாதனை
» விருது வழங்கும் விழா:சென்னையில் திரண்ட நடிகர், நடிகைகள்
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் ரிலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum