சிவாஜியின் கர்ணன் படம் 100-வது நாள் விழா: 48 வருடத்துக்கு பிறகு மீண்டும் சாதனை
Page 1 of 1

சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. பல தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடின. சென்னை சத்யம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியுள்ளது.
இப்படத்தின் 100-வது நாள் விழாவை சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கர்ணன் படம் பார்க்க திரண்டு வந்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் இதில் பங்கேற்று ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசியதாவது:-
திரைப்படங்களில் சிவாஜி கணேசன் தொடாத இடமே இல்லை. எல்லா கதாபாத்திரத்திலும் நடித்தார். காதல் உணர்வுகளை கதாநாயகியை தொடாமலேயே வெளிப்படுத்தினார். தேசிய தலைவர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.
48 வருடங்களுக்கு பிறகும் கர்ணன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாஜி கணேசன் தமிழர்கள் மனதில் இப்போதும் நிறைந்து இருக்கிறார் என்பதற்கு இது சாட்சி.
தமிழக காங்கிரஸ் கட்சி இப்போதும் வலுவாக இருப்பதற்கு இரு தலைவர்கள் காரணம். அதில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர். இன்னொருவர் சிவாஜி கணேசன்.
வாழ்நாள் முழுவதும் பல நல்ல காரியங்களை சிவாஜி செய்து உள்ளார். விளம்பரம் இல்லாமல் நிறைய நன்கொடைகள் அளித்துள்ளார். சீன யுத்த களத்திற்கு சென்று தனது சொந்த நகைகளையே நிதியாக அளித்தார். சிவாஜிக்கு புகழ் சேர்க்க கடற்கரையில் அவரது சிலையை அமைத்த கலைஞருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட ஜெயலலிதா ஏற்கனவே முதல்- அமைச்சராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்தார். இன்னும் மணி மண்டபம் கட்டப்படவில்லை. சிவாஜி மணி மண்டபத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை அவர் செய்தால் ஜெயலலிதா சாதனை மைல் கல்லில் சிவாஜி மணி மண்டபமும் இடம் பெறும்.
சிவாஜியை பற்றி முதல்வருக்கு நன்றாக தெரியும். அவரோடு படங்களில் நடித்துள்ளார். எனவே மணி மண்டபத்தை கட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் என்.ரங்கபாஷ்யம், மணிபால், சிவராமன், சூளை ராஜேந்திரன் மற்றும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ராமஜெயம், தியாகராஜன், சம்பந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் வெளியாகிறது சிவாஜியின் 'கர்ணன்'
» கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு
» 2 வருடத்துக்கு பிறகு நடிக்கிறார் வடிவேலு
» அஜித்தின் “மங்காத்தா” படம்: 100-வது நாள் விழா
» பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum