தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் ரிலீஸ்!

Go down

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் ரிலீஸ்! Empty டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் ரிலீஸ்!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:45 pm

1960களில், பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி ‌கணேசன்,
முத்துராமன், அசோகன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த
படம் கர்ணன். இப்படம் இப்போது நவீன முறையில் மெருகேற்றப்பட்டு மார்ச் 16ம்
தேதி(நாளை) ரிலீசாகிறது. இந்த புதிய முயற்சியில் இறங்கிய திவ்யா பிலிம்ஸ்
சாந்தி சொக்கலிங்கத்திடம் நாம் கேட்ட போது அவர் சொன்ன தகவல்கள் இதோ…
* அப்போதைய படங்கள் பெரும்பாலும் 35 எம்.எம்.,-ல் தயாரானது. இப்போது
அந்த வகையில் படங்களை வெளியிட திரை அரங்குகள் இல்லை. எனவே தற்போதைய நவீன
தொழில்நுட்பத்தில் கர்ணன் படத்தை மெருகேற்றி, அதன் பழமை மாறாமல் நெகட்டிவ்
எல்லாம் எடுத்து டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, அதில் சேதம் அடைந்த
சில பகுதிகளை பிரசாத் ‌லேப்பில் சரி செய்து மாற்றியமைத்து இப்படத்தை தயார்
செய்துள்ளோம்.

* அடுத்து இசை மற்றும் ஒலி வடிவம், அந்தக்கால பாடல்கள் அனைத்தும் மோனோ
முறையில் வெளிவந்தன. அதை எல்லாம் டி.டி.எஸ்., முறையில் கொண்டு வந்து,
வரிகளை தனியே எடுத்து, பின்னணி இசையை மட்டும் லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம்
எடுத்து, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளிவந்த பாடல்களை அதன் தன்மை
மாறாமல் நவீன வளர்ச்சியில் இசை மெருகேற்றம் செய்து பாடல்களை உருவாக்கி
உள்ளோம். பாடல்களும் பழமை மாறாமல் நன்றாக வந்திருக்கிறது.

* அந்தக்காலத்தில் பட டிசைன்கள் எல்லாம் கறுப்பு வெள்ளையில் வந்தன. அதை
இப்போது எல்லாம் சரி செய்து, கலரில் வெளியிட கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆனது.
ஏற்கனவே நாங்கள் உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், தெய்வமகன் போன்ற
படங்களை ரீ-ரிலீஸ் செய்துள்ளோம். ஆனால் கர்ணன் படத்தை வெளியிட மட்டும்
கிட்டத்தட்ட 3 வரு‌டம் காலம் ஆனது.

முடிந்தவரை சிவாஜியின் கர்ணன் படத்தை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு
சேர்க்க வேண்டும் என்று முயற்சி ‌மேற்கொண்டோம். ஏனென்றால் சிறு
வயதினருக்கு சத்யம் தவறாமை, பொய் சொல்லக்கூடாது, நன்றி மறவாமை, துரோகம்
செய்யாமை, பிறருக்கு உதவுதல் போன்ற நல்ல செய்திகளை படத்தை பார்க்கும்
ஒவ்வொரு சிறுவர்களுக்கும் உண்டாக்க வேண்டும் என நான் விரும்பினேன். எனது
இந்த முயற்சிக்கு பலரும் உதவினர். குறிப்பாக சிவாஜி சார் மகன் ராம்குமார்
ரொம்பவே உதவி செய்தார். 16ம் தேதி முதல் கர்ணன் படம் திரை அரங்குகளில்
ரிலீஸ் ஆக இருக்கிறது என்றார் திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த மாளிகை 80 தியேட்டரில் ரிலீஸ்
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» அமெரிக்காவில் 27-ந்தேதி ஆங்கில சப் டைட்டிலுடன் சிவாஜியின் கர்ணன் ரிலீஸ்
» கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா: நடிகர், நடிகைகள் வாரிசுகளுக்கு கேடயம் வழங்குகிறார் பிரபு
» ‘நண்பன்’ ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum