தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறு பிரச்சினையில் கருத்து வேறுபாடு: திருமணத்தை முறித்துக் கொண்டேன்-நடிகை சுஜிபாலா

Go down

சிறு பிரச்சினையில் கருத்து வேறுபாடு: திருமணத்தை முறித்துக் கொண்டேன்-நடிகை சுஜிபாலா Empty சிறு பிரச்சினையில் கருத்து வேறுபாடு: திருமணத்தை முறித்துக் கொண்டேன்-நடிகை சுஜிபாலா

Post  ishwarya Sat Mar 30, 2013 5:42 pm

நடிகை சுஜிபாலா இன்று மதியம் 1.30 மணிக்கு செல்போனில் மாலைமலர் நிருபரை தொடர்பு கொண்டு கூறியதாவது:-

டைரக்டர் ரவிக்குமாருடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். இருவருக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் எங்களுக்குள் சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எங்களுக்குள் பிரச்சினை மூண்டது. இனியும் திருமணம் செய்து கொண்டால் எப்படி வாழ்வது என்று யோசித்தோம். எனவே இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அதன்படி திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்.

ரவிக்குமார் டைரக்ட் செய்யும் ‘உண்மை’ படத்தில் இன்னும் சில காட்சிகளில் நான் நடிக்கவேண்டியது பாக்கி இருக்கிறது. அதனை முடித்து கொடுப்பேன். இனி என் வாழ்க்கை சினிமாவுக்காக மட்டுமே. மலையாள படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வருகிறது. சினிமாவில் இருப்பதால் கிசுகிசுக்கள் வருவது சகஜம். என்னை பற்றி வந்த வதந்திகளால் மனது காயப்பட்டது. இப்போது அது பழகி விட்டது. இனி இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum