படம் பார்த்தே இயக்கக் கற்றுக் கொண்டேன் : வெங்கட் பிரபு
Page 1 of 1
படம் பார்த்தே இயக்கக் கற்றுக் கொண்டேன் : வெங்கட் பிரபு
இன்னும் தமிழ் சினிமாவில் நான் அறியப்படுகிறேன் என்று நினைத்தாலே அது எனக்குப் பெருமையாக உள்ளது. நான் ஒரு சில படங்களில நடித்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு படத்தை இயக்குவதுதான் பிடித்திருக்கிறது.
படத்தை இயக்குவதற்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை. படங்களைப் பார்த்தே ஒரு படத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் என்கிறார் நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு.
சென்னை 28 படத்தை இயக்கும்போது கதை எழுதிய சக்தி சரவணனும், எடிட்டர் பிரவீனும் எனக்கு மிகவும் உதவி செய்தனர். ஆரண்ய காண்டம் போன்ற படத்திற்காக பீரவீன் தேசிய விருது பெற்றது எனக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.
சென்னை 28 படம் நிச்சயம் பல்வேறு விதமான கருத்துக்களை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்த்தேன். அது நடந்தது. ஆனால் அதன் வெற்றி நிச்சயம் நான் எதிர்பாராதது என்று கூறுகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.
மேலும், மங்காத்தா படத்திற்கு கதை எழுதும்போது, ஒரு இளைஞர் பட்டாளம், பணத்திற்காக ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வகையில் கதை அமைத்திருந்தேன். அதில் அஜீத் ஆர்வம் காட்டியதால், அஜீத்திற்கு ஏற்றபடி கதையில் மாற்றம் செய்து இயக்கியிருந்தேன்.
பல்வேறு வகையான சினிமாவை, ஆக்சன், அனிமேஷன், குழந்தைகளுக்கான படம் போன்றவற்றை இயக்க நான் விரும்புகிறேன். நிச்சயம் என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் வெங்கட் பிரபு.
சென்னை 28, சரோஜா, கோவா போன்ற வித்தியாசமான படங்களை அளித்த அந்த இயக்குனரிடம் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்கட் பிரபு கூட ஒரு படம் பண்ணுங்க ப்ளீஸ்: விஜய்க்கு ரசிகர்கள் வேண்டுகோள்
» வெங்கட் பிரபு கூட்டணியில் சூர்யா!
» ‘மொட்டை போட்ட’ வெங்கட் பிரபு!
» சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! – வெங்கட் பிரபு
» வெங்கட் பிரபு கூட்டணியில் சூர்யா!
» ‘மொட்டை போட்ட’ வெங்கட் பிரபு!
» சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! – வெங்கட் பிரபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum