ஆபாசப் பேச்சு: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!
Page 1 of 1

6 மாதங்களுக்கு முன் நான் பேசிய சில கருத்துகள் பத்திரிகையாளைப் புண்படுத்தியதை உணர்ந்து வருத்தத்தையும் மன்னிப்புக் கோரலையும் ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி எக்காரணம் கொண்டும் யார் மனதும் புண்படும்படி பேசவோ, எழுதவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன்…” என்றார் நடிகர் விவேக்.
விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் என்று நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கம் நடத்திய கூட்டத்தில் நடிகர் விவேக் மிக மோசமாகப் பேசினார்.
சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்காமல், பொதுவாக,பத்திரிகையாளர்களின் குடும்பப் பெண்களுக்கு பிரா – ஜட்டி மாட்டி தன் செலவில் அதைப் படமெடுத்து போஸ்டர் அடித்து நகர் முழுக்க ஒட்டுவேன் என்றார்.
இதனால் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் போராட்டத்தை நடத்தின.
அதே நேரம், விவேக் தொடர்பான கூட்டங்கள், செய்திகள் மற்றும் சந்திப்புகளைத் தவிர்த்து வந்தனர் சினிமா பத்திரிகையாளர்கள்.
இதனால் விவேக் படங்கள் ரிலீசாவதும் தடைபட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விவேக். பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அவரே போன் செய்து, வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பத்திரிகை சந்திப்புக்கு அழைத்தார்.
இந்த சந்திப்பின்போது அவர் கூறியது:
“1987-ம் ஆண்டு மனதில் உறுதிவேண்டும் படத்தில் அறிமுகமாகி இன்றோடு 23 வருடங்கள் ஆகின்றன. எனக்கு கலைக்குடும்ப பின்னணியோ, ஏற்றிவிடுவதற்கு யாருமோ அல்லது தூக்கி விடுவதற்கு எந்த ‘காட்பாதர்’களோ இல்லை.
ஆனால், இந்த 23 வருடங்களாக பத்திரிகைகளும், பிற ஊடகங்களும் என்னை கைப்பிடித்து அழைத்து வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. என் நிறை குறைகளையும், விருப்பு வெறுப்பின்றி சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
மன்னிப்பு கோருகிறேன்!
ஆனால், 6 மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில், குறிப்பிட்ட ஒரு செய்தி குறித்தான கண்டனத்தைத் தெரிவித்தபோது, அது சிதறி எல்லோர் மீதும் தெளித்துவிட்டதை சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.
என் நலம் விரும்பிகள் பலர் என்னிடம் இதை தெரிவித்தபோது மிகுந்த வருத்தமடைந்தேன். அதன்பின்னரே என் தன்னிலை விளக்கத்தையும், வருத்தத்தையும், மன்னிப்பு கோரலையும் தெரிவித்தேன்.
சமீபத்தில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் கூட நான் பேட்டி அளித்தபோது, நான் நன்றி சொல்ல விரும்புவதும், வருத்தத்தை தெரிவிக்க விரும்புவதும் பத்திரிகையாளர்களுக்குத்தான் என்று கூறினேன். இனி எக்காரணம் கொண்டும் யார் மனதும் புண்படும்படி பேசவோ, எழுதவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
அடுத்து நான் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் நடித்த ‘மகனே என் மருமகனே’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதையடுத்து ‘வாடா’ என்ற படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனை போல் நடித்துள்ளேன்.
‘மாப்பிள்ளை’ படத்தில் ‘சைல்டு சின்னா’வாகவும், ‘கந்தா’ படத்தில் ரியல் எஸ்டேட் தங்கராசுவாகவும், ‘உத்தமபுத்திரன்’ படத்தில் எமோசன் ஏகாம்பரமாகவும், ‘சிங்கம்’ படத்தில் ஏட்டு எரிமலையாகவும், ‘பலே பாண்டியா’வில் பிரிட்டிஷ் வாலிபனாகவும், ‘பவானி’ படத்தில் கிரிவலம் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.
சமூகக் கருத்துக்கள்…
அடுத்து வரும் படங்களில் உலகத்தையே பயமுறுத்தி வரும் ‘வெப்ப மயமாதல்’, ‘மழை இழப்பு’, ‘வனம் இழப்பு’, ‘நிலத்தடி நீர் பற்றாக்குறை’, ‘அழிந்துவரும் விவசாயம்’, ‘உழவர்களின் நிலை பற்றி’ என் நகைச்சுவையில் கூற விரும்புகிறேன். அதற்கு ஆரம்பமாக திண்டுக்கல் காந்தி கிராமிய வேளாண் பல்கலைக்கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த உழவர் மாநாட்டில் இயற்கை விஞ்ஞானம் பற்றி பேசிவிட்டு வந்திருக்கிறேன்.
அப்துல் கலாம் பிறந்த நாள்…
தமிழர்களின் பெருமையாகவும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இளைஞர்களின் வழிகாட்டியாகவும், மாணவர்களுக்கு திசைகாட்டியாகவும் விளங்கும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ந் தேதியை ‘மாணவர் தினமாக’ அறிவிக்க வேண்டும். மீடியா இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்”, என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ‘பேச்சியக்கா மருமகன்’!
» ஹன்ஸிகாவிடம் மன்னிப்புக் கேட்ட பிரபு தேவா
» ரஜினி பற்றிய கட்டுரை… மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!
» சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் பேச்சு
» நடை, உடை, பேச்சு, செயல் என ரஜினியிடம் எல்லாமே “ஸ்டைல்”: குஷ்பு, விவேக், பாலசந்தர், ரவிக்குமார் பாராட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum