நடை, உடை, பேச்சு, செயல் என ரஜினியிடம் எல்லாமே “ஸ்டைல்”: குஷ்பு, விவேக், பாலசந்தர், ரவிக்குமார் பாராட்டு
Page 1 of 1

சூப்பர்
ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது. 1975-ல் அபூர்வராகங்கள் படம் மூலம்
அறிமுகமானார். இதுவரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அகில
இந்திய அளவில் ஸ்டைல் நடிகர் என்ற முத்திரை ரஜினிக்கே சாரும்.
ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு ஸ்டைல்களை புகுத்தி கவர்ந்தார். ரஜினி
பிறந்தநாளில் அவரைப் பற்றி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் சொல்கிறார்கள்.
நடிகை குஷ்பு:
ரஜினி என் நெருங்கிய நண்பர். அவருடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன்.
அவர் மேல் எனக்கு நிறைய மரியாதை உண்டு. ரஜினி அணியும் ஆடைகளில் மட்டும்
ஸ்டைல் இல்லை. பேசுவது, நடப்பது என எல்லாமே ஸ்டைலாக இருக்கும். பிற
நடிகர்கள் ரஜினி ஸ்டைலை பின்பற்றி நடிக்க முடியாது.
நடிகர் விவேக்:
ரஜினியின் பெரிய அடையாளமே அவரது எளிமைதான். மற்றவர்களைப் பற்றி தவறாக
பேசமாட்டார். அது நான் அவரிடம் கற்றுக் கொண்ட பெரிய விஷயம். ரஜினியின்
ரசிகனாக இருக்கிறேன். அவர் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பதை
காப்பியடித்து நானும் சில படங்களில் செய்தேன். அவர் சிகரெட்டை விட்டதும்,
நானும் அதுபோல் நடிப்பதை நிறுத்தி விட்டேன்.
இயக்குனர் பாலச்சந்தர்:
நிறைய நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கிறேன். அபூர்வராகங்கள் படத்தில்
ரஜினியை அறிமுகம் செய்தேன். அப்படம் தேசிய விருதை பெற்றது. அந்த விருதை விட
அப்படங்களில் ரஜினி மாதிரி ஒரு நடிகரை அறிமுகம் செய்ததுதான் பெரிய விருது.
ரஜினி கடின உழைப்பாளி. மனிதாபிமானம் உள்ளவர். இதுவே அவரது வெற்றிக்கு
காரணம். ரஜினி மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்:
கடந்த வருடம் பிறந்தநாளின்போது எந்திரனை முடித்து ரஜினி களைப்பாக
இருந்தார். இந்த வருடம் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். “ராணா”
படத்துக்காக அவரை வாரத்துக்கு ஐந்து தடவை சந்திக்கிறேன். அடுத்த
பிறந்தநாளுக்குள் “கோச்சடையான்” படத்தை முடித்து விட்டு “ராணா” படத்துக்கு
தயாராக வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன். படப்பிடிப்புகளில் ரஜினி என்னை
“பாஸ்” என்று அழைப்பார். கதை விவாதங்களின்போது “சார்” என்று கூப்பிடுவார்.
இயக்குனர் வெங்கட்பிரபு:
ரஜினி ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது புது ஸ்டைலை அறிமுகப்படுத்துவார்.
“ராஜாதிராஜா” படத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலை நிறைய பேர் பின்பற்றினர்.
சவுந்தர்யா:
2011 எங்களுக்கு கடினமான ஆண்டாக இருந்தது. ரசிகர்கள் பிராத்தனையும்,
அன்பும் அதில் இருந்து வெளியே வர உதவியது. இதற்காக அனைவருக்கும் என்
இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தைக்கு என் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலசந்தர் பாராட்டு
» சதை போடுங்கள் என்றேன்: ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு
» வில்லன் நடிப்பில் என்னை மிஞ்சிட்டீங்க.. – ரஜினியிடம் பாராட்டு பெற்ற சுதீப்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர்: விஜய்-குஷ்பு பாராட்டு!
» ஆபாசப் பேச்சு: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum