திருப்பாவை - 4
Page 1 of 1
திருப்பாவை - 4
ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்து கொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழிஅற் தோள் உடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர்ஆட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்....
அருள்மழை பொழியக்கூடிய கண்ணணே! மழைக்கு அதிபதியான மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே நீ கடலில் மூழ்கி நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியைப்போல் கருமை நிறம் பெற்று மேகமாக மாற வேண்டும். பெருமை பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரம் போல் மின்ன வேண்டும். அவனுடைய மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதைப் போல் இடி இடிக்க வேண்டும். பெருமானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்லில் புறப்படும் அம்பு போல் உலக மக்கள் யாவரும் வாழும் படி உடனே மழை பொழிய வேண்டும். நாங்கள் மார்கழியில் நீராடி உன் புகழ் பாடி மகிழ வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum