திருப்பாவை - 13
Page 1 of 1
திருப்பாவை - 13
புள்ளின்வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போது அரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே!
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
பொருள்.... இராமனாக தோன்றி இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்தவன். கண்ணன் அவதாரத்தின் போது பறவை வடிவமெடுத்து வந்த பகாசுரன் என்ற அரக்கனின் வாயைக் கிழித்து கொன்றவன். இப்படிப்பட்ட பெருகை மிக்க ஸ்ரீமன்நாராயணனின் புகழைப்பாடி கொண்டு எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.
இரவு முடிந்து அதிகாலை வந்து விட்டது. பறவைகள் மகிழ்ச்சிப்பொங்க கூவுகின்றன. பூப்போன்ற கண்களை உடையவளே. உடல் நடுக்கம் கொள்கிற படி குளிர்ந்த நீரில் மூழ்கி நீராடாமல் படுக்கையில் கிடக்கலாமா? கண்ணனோடு வரம்பெறும் நாளில் துயில்கின்ற கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு நீராட வருவாய்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum