அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
Page 1 of 1

ஸ்தல வரலாறு....
மூலவர் - அபயவரத ஆஞ்சநேயர்
தல விருட்சம் - பலா
தீர்த்தம் - அனுமன் தீர்த்தம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது. பெருமாள், இராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர்.
இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
நடை திறந்திருக்கும் நேரம்....
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையும், இரவில் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» பாலமுருகன் கோவில் - திண்டுக்கல் மாவட்டம்
» வீர ஆஞ்சநேயர் கோயில்
» திண்டுக்கல் கோர்ட்டு அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச்சு
» தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum