பாலமுருகன் கோவில் - திண்டுக்கல் மாவட்டம்
Page 1 of 1

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தாண்டிக்குடி. இங்குள்ள பாலமுருகன் கோவில் பிரசித்திபெற்றது.
முன்னொரு காலத்தில் அகத்தியர் கயிலையை அடைந்து சிவபெருமானை தரிசித்த பொழுது சிவபெருமான் சிவகிரி, சத்திகிரி என்ற இரண்டு சிறு குன்றுகளை அவருக்கு கொடுத்தார்.
அகத்தியர் தனது சீடனாகிய இடும்பனிடம், இறைவன் அன்புடன் அளித்த அந்த இரு குன்றுகளையும் சுமந்து தெற்கே உள்ள பொதிகை மலைக்கு கொண்டு வரும்படி பணித்தார்.
குருவின் பணியை தலைமேற்கொண்டு குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திர பலத்தினால் இரு குன்றுகளையும் பிரம்ம தண்டத்தை கோலாகக் கொண்டு காவடி கட்டி தூக்கி வந்தான் இடும்பன்.
இன்றைய பழனியை வந்தடைந்ததும் இடும்பன் களைப்புற்று காவடியை கீழே இறக்கி வைத்து விட்டு சற்று ஓய்வெடுத்தான். அந்தநேரத்தில் மலைவளம் கண்டு கொண்டிருந்த முருகப்பெருமான் இவ்விரு குன்றுகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள உரியது என்று கருதி ஒரு மலையில் இருந்து பழனிக்கு ஒரே தாண்டாக தாண்டி ஒரு குன்றின் மீது அமர்ந்து கொண்டார்.
முருகன் அங்கிருந்து தாண்டியமையால் `தாண்டிக்குதி' என்று அப்பகுதி அழைக்கப்பட்டு காலப்போக்கில் `தாண்டிக்குடி' என்று மாறிவிட்டது. இங்கு வரும் பக்தர்களுக்கு திருமண்ணே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது. முதலில் திண்டிவனம் சென்று பின் தாண்டிக்குடி வழியாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மயில்பாறை பாலமுருகன் கோவில்
» Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம
» தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்
» அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
» திண்டுக்கல் கள்ள காதல்: ஜோடி வெட்டிக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum