திண்டுக்கல் கோர்ட்டு அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச்சு
Page 1 of 1

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன். கடந்த 2012-ம் ஆண்டு திண்டுக்கல்லில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி (35) கைது செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளிவந்தார். மாதம் இருமுறை அவர் கோர்ட்டில் கையெத்திட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை ஒரு மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றது. இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி தனது ஆதரவாளர்களுடன் ஒரு காரில் மாவட்ட கோர்ட்டில் ஆஜராவதற்காக வந்தார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு முத்துப்பாண்டி வெளியே வந்து தனது காரில் ஏறி சென்று கொண்டிருந்தார். கோர்ட்டு அருகே உள்ள யூனியன் ஆபீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தப்படி வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென முத்துப்பாண்டி சென்ற காரின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசினார்.
காரில் விழுந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. அப்போது சுதாரித்துக் கொண்ட முத்துப்பாண்டி காரை நிறுத்திவிட்டு தப்பியோடினார். எனினும் அந்த வாலிபர் அவரை விடாமல் தூரத்தி மற்றொரு குண்டை வீசினார். அப்போது முத்துப்பாண்டியின் ஆதரவாளர்கள் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர்.
ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவர்கள் மீதும் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டார். வெடிகுண்டுகள் வெடித்தத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமியை சல்லடை போட்டு தேடினர்.
அப்போது பஸ் நிலைய பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்த நடராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
கைதான நடராஜனின் தந்தை முனுசாமி ஏற்கனவே கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முத்துப்பாண்டி முக்கிய குற்றவாளியாக உள்ளார். இதனால் பழிக்குபழி வாங்க நடராஜன் முத்துப்பாண்டி மீது வெடிகுண்டு வீசினாரா? அல்லது பசுபதி பாண்டியன் கொலை சம்பந்தமாக பழிவாங்குவதற்காக வெடிகுண்டு வீசினாரா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நடராஜனுடன் வந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிப்பட்டால் இன்னும் பல திடுக்கிடும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» பால், பீர், பஸ் மீது கல் வீச்சு…அஜீத் ரசிகர்கள் கலாட்டா!
» கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
» பட்ஜெட் உரைக்கு அ.தி.மு.க.கவுன்சிலர் கருத்து
» பாலமுருகன் கோவில் - திண்டுக்கல் மாவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum