தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாண்டிராஜுக்கு துபாயில் பாராட்டுவிழா

Go down

பாண்டிராஜுக்கு துபாயில் பாராட்டுவிழா Empty பாண்டிராஜுக்கு துபாயில் பாராட்டுவிழா

Post  ishwarya Tue Mar 26, 2013 5:48 pm



தமிழ் திரையுலகில் பசங்க, வம்சம் போன்ற மிகச் சிறந்த படங்களை எடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மெரினா.

தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மெரினா படத்திற்கு அடுத்து என்ன படம் இயக்கப்போகிறீர்கள் என்று கேட்க பாண்டிராஜைத் தொடர்பு கொண்டோம்.

அவர், "எனது அடுத்த படத்தைப் பற்றி இன்னும் நான் முடிவு செய்யவேயில்லை. துபாய் தமிழ் கழகம் எனக்கு துபாயில் பாராட்டு விழா நடத்த உள்ளது. பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் துபாய் செல்ல உள்ளேன். அங்கு போன பிறகுதான் எனது அடுத்த படத்திற்கான கதையை முடிவு செய்யப்போகிறேன்" என்றார்.

விக்ரமை நீங்கள் சந்தித்து கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வருகிறதே என்று கேட்டதற்கு... "இது எனக்கு நீங்கள் சொல்லும் செய்தி. ஆம். இதுவரை நான் விக்ரமை சந்திக்கவில்லை. ஆனால், என் அடுத்த படத்தில் பெரிய நடிகருடன் பணியாற்ற விரும்புகிறேன். பார்ப்போம். என் விருப்பம் எந்த அளவிற்கு கைகூடும்" என சொல்லிவிட்டு நமது பாராட்டுக்களோடு விடை பெற்றார் தேசிய விருது இயக்குநர் பாண்டிராஜ்.

மேலும், சுசீந்திரன் இயக்கும் படத்திற்கு வசனம் எழுதும் பாண்டிராஜ், தனது இரண்டாவது முகத்தை சினிமாத்திரையில் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum