தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்பட கதாசிரியர் கலைமணி காலமானார்

Go down

திரைப்பட கதாசிரியர் கலைமணி காலமானார் Empty திரைப்பட கதாசிரியர் கலைமணி காலமானார்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:33 pm



சென்னை, ஏப். 3: பிரபல திரைப்பட கதாசிரியரும் இயக்குநருமான கலைமணி (62) சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

சென்னை தியாகராய நகரில் குடும்பத்தாருடன் வசித்து வந்த கலைமணி சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் அவருடைய உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை இரவு காலமானார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி நடித்த "16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானார் கலைமணி. அதன் பிறகு "மண் வாசனை', "கோபுரங்கள் சாய்வதில்லை', "பிள்ளை நிலா', "இங்கேயும் ஒரு கங்கை', "முதல் வசந்தம்', "சிறைப்பறவை', "மனைவி சொல்லே மந்திரம்' உள்பட 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். விஜய் நடித்த "குருவி' படத்துக்கு கடைசியாக வசனம் எழுதியிருந்தார்.

எவரெஸ்ட் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் "கோபுரங்கள் சாய்வதில்லை', "இங்கேயும் ஒரு கங்கை', "மல்லுவேட்டி மைனர்", "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' உள்பட 16 படங்களைத் தயாரித்துள்ளார்.

"தெற்கத்தி கள்ளன்', "எங்க ஊர் ராசாத்தி', "மனித ஜாதி', "பொறுத்தது போதும்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். கலைமாமணி உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். மறைந்த கலைமணியின் உடலுக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச் சடங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயக்குநர் கலைமாமணி கலைமணி காலமானார்!
» திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் காலமானார்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்
» நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum