தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் காலமானார்

Go down

திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் காலமானார் Empty திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் காலமானார்

Post  ishwarya Sat Mar 23, 2013 6:08 pm

சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த பி.எஸ்.லோகநாத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.

சாந்தி நிலையம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். அதன் பிறகு அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், அச்சமில்லை அச்சமில்லை உள்பட சுமார் 86 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

இதில் அபூர்வ ராகங்கள் படத்துக்காக தேசிய விருது, நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக மாநில அரசு விருது உள்பட ஏராளமான திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியவற்றில் 55-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அவருக்கு மனைவி ராதா, மகன் சஞ்சய், 2 மகள்கள் உள்ளனர். இறுதிச் சடங்கு கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் – கேபி, கமல் அஞ்சலி
» பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்
» திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் மகள் மாடியிலிருந்து விழுந்து மரணம்
» திரைப்பட கதாசிரியர் கலைமணி காலமானார்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum