நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
Page 1 of 1
நடிகர் எம்.ஆர்.கே. காலமானார்
சென்னை, ஆக.3: நடிகர் எம்.ஆர்.கே என்ற எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (72) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த எம்.ஆர்.கே. கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமானார்.
வி.கோபாலகிருஷ்ணனின் நாடகக் குழுவில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்ற எம்.ஆர்.கே., கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த "காவல் தெய்வம்' படத்தின் மூலம் 1969-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் ஸ்ரீதர் இயக்கிய "ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். ரஜினிகாந்துடன் "தர்மத்தின் தலைவன்', "அதிசயப்பிறவி', "அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் "மகராசன்', விக்ரமுடன் "தில்', "சாமி' உள்பட முன்னணி நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 500-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மறைந்த எம்.ஆர்.கே.க்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சுலோசனா 2008-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எம்.ஆர்.கே.யின் இறுதிச் சடங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் மனோகரன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» நடிகர் ராஜேஷின் மனைவி காலமானார்
» பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» காலமானார் நடிகர் நரசிம்மன்
» நடிகர் ராஜேஷின் மனைவி காலமானார்
» பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum