முகமூடி பற்றி மிஸ்கின்
Page 1 of 1
முகமூடி பற்றி மிஸ்கின்
கடந்த 9 மாதமாக பெரும்பாலும் இரவு நேரங்களிலேயேயே கழித்துள்ளார் மிஸ்கின். ஏன் என்னப் பிரச்சினை அவருக்கு என்று கேட்காதீர்கள். முகமூடி படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே எடுக்கப்பட்டதைத்தான் அப்படி சொல்கிறோம் நாம்.
தனது கனவுப் படமான முகமூடியை, தனது ஸ்டைலில் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக நடிகர் ஜீவாவை வைத்து எடுத்து வருகிறார் இயக்குநர் மிஸ்கின்.
படத்தைப் பற்றி அவரிடம் கேட்க நள்ளிரவில் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு. ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் இப்படத்தின் வேலைகளில் மிகவும் களைப்பாக இருப்பார் என்று நினைத்து அவரை சந்தித்ததும், மிகவும் உற்சாகமாக நம்மை வரவேற்று படத்தைப் பற்றி அவரே விவரிக்கத் துவங்கிவிட்டார்.
"எனது முந்தையப் படங்களைப் போலவே சிறந்த பொழுதுபோக்குப் படமாக முகமூடி இருக்கும். இப்படம் மேலும் பல த்ரில்லிங் காட்சிகளைக் கொண்டிருக்கும்" என்கிறார் மிஸ்கின்.
டிம் பர்டன்ஸ் படங்களால் மிகவும் கவரப்பட்ட மிஸ்கின், தற்போது எடுத்து வரும் முகமூடி படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி குறிப்பிட்டு கேட்டதற்கு, "பொதுவாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் எடுத்தாலே அதில் ஒன்று, ரியாலிட்டி மறைந்துவிடும் அல்லது படத்தை கிராபிக்ஸ் விழுங்கிவிடும். ஆனால், முகமூடி படத்தில் மிகவும் தேவையான இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும், ஆனால் அது படத்தை எந்த வகையிலும் ஓவர்டேக் செய்யாமல் பார்த்துக் கொண்டுள்ளேன்" என்றார்.
"ஒரு சில ஆண்டுகளாக இப்படத்தின் கதையை பத்திரமாக வைத்திருந்தேன். யுத்தம் செய் படத்தை முடித்த பிறகுதான் இப்படத்தைத் துவக்க வேண்டும் என்று காத்திருந்தேன்" என்ற தகவலையும் சொன்னார் மிஸ்கின்.
இப்படத்தை யாரை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்கள் என்று கேட்டதற்கு, "யாரையும் மனதில் வைத்துக் கொண்டு இக்கதையை எழுதவில்லை. இக்கதையே ஒரு சூப்பர் ஹீரோ தான். எனவே, இக்கதையை எழுதி முடித்த பிறகு இதற்கு யார் சரியாக வருவார்கள் என்று யோசித்ததில் ஜீவா முதல் சாய்சாக இருந்தார். ஜீவா இதுவரை நடித்திராக கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிச்சயம் அவருக்கும் இப்படம் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்" என பதிலளித்தார்.
"நடக்க முடியாத எதையும் முகமூடியில் ஜீவா செய்ய மாட்டார். ஒரு சாதாரண மனிதனால் எது முடியுமோ அதை மட்டுமே இப்படத்தில் செய்ய உள்ளார். நான் ஒரு இந்திய சினிமாப் படத்தை இயக்குகிறேன் என்ற நினைப்பு எப்போதும் எனக்கு இருக்கும். இந்திய ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நகைச்சுவையாகிவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறேன்" என்றார் நம்பிக்கையும், தெளிவும் தொணிக்க.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இப்போதைக்கு இயக்குநர் பணியே போதும் : மிஸ்கின்
» முகமூடி உருவான கதை!
» ஆகஸ்டில் முகமூடி
» முகமூடி ரிலீஸ் தேதி
» யுகே-யில் முகமூடி
» முகமூடி உருவான கதை!
» ஆகஸ்டில் முகமூடி
» முகமூடி ரிலீஸ் தேதி
» யுகே-யில் முகமூடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum