முகமூடி உருவான கதை!
Page 1 of 1
முகமூடி உருவான கதை!
முகமுடி கதையைக் கேட்க எனது அலுவலகத்துக்கு வரமுடியுமா என்று ஜீவாவிடம்
கேட்ட பத்து நிமிடத்தில் என் முன்னாள் நின்றார். அதேபோல ஆறுமாதம் குங்பூ
பயிற்சி எடுக்க வேண்டும் முடியுமா என்றேன், அவரோ ஆறு வருடமாக குங்பூ
பயிற்சியில இருக்கேன் என்றார். இந்தத் தகுதியை பல ஹிரோக்களிடம்
எதிர்பார்த்து அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது என்று நேற்று சென்னை
சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்த முகமுடி தொடக்க
விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம்,
சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள்
சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது
மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன்,
ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக
உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி
தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட
படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான
துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல
ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை
வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும்
குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்ஷன் டைரக்டர்களாக
நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா,
ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே
மாதம் வெளியாக இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆகஸ்டில் முகமூடி
» இந்திக்கு செல்லும் முகமூடி
» முகமூடி ட்ரெய்லர் வெளியீடு
» முகமூடி ரிலீஸ் தேதி
» காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ்
» இந்திக்கு செல்லும் முகமூடி
» முகமூடி ட்ரெய்லர் வெளியீடு
» முகமூடி ரிலீஸ் தேதி
» காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum