தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் படத்தில் கமலஹாசன்

Go down

ஹாலிவுட் படத்தில் கமலஹாசன் Empty ஹாலிவுட் படத்தில் கமலஹாசன்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:28 pm



சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழா (ஐஐஎப்ஏ) நிகழ்ச்சியில் படங்களுக்கான விருதுகள் அறிவிப்பினால் மட்டும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையவில்லை, ஒரு பட அறிவிப்பினாலும் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் பெர்ரி ஹாஸ்போர்னியுடன் கைகோர்த்துள்ள கமல், பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக பட விழாவில் இருவரும் அறிவித்துள்ளனர்.

தி லார்ட் ஆப் தி ரிங்ஸ், தி ரிட்டர்ன் ஆப் தி கிங், தி வாட்டர்ஹோர்ஸ், தி வாரியார்ஸ் வே, தி பிராபெட் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்தான் இந்த பர்ரி ஹாஸ்போர்ன்.

ஹாலிவுட் பட வாய்ப்பு குறித்து பேசிய கமல், மிகவும் கடினமாக பணியாற்றிக் கொண்டிருப்போம். ஆனால் அது நன்றாக இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. எப்போது பர்ரி போன்றவர்கள் நம்மை அணுகுகிறோர்களோ அப்போதுதான் நாம் அதை உணர முடியும் என்றார்.

கமலஹாசன் நடிக்கும் படம், இந்திய வரலாற்றை ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் என்று பர்ரி கூறினார்.

தற்போது கமலை சந்தித்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். சமீபத்தில் விஸ்வரூபம் பட வேலைகளுக்காக ஹாலிவுட் வந்திருந்தார் கமல். அப்போது அவர் உருவாக்கியுளள விஸ்வரூபம் படத்தைப் பார்க்க என்னை அழைத்தார். நானும் படத்தைப் பார்த்தேன். வியந்து விட்டேன்.

அப்போதுதான் அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவரிடம் அதைப் பற்றி பேசினேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இனி படம் தயாரிப்பது குறித்த பணிகளில் இறங்க உள்ளேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum