தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் படத்தில் கமல் ஹாசன்

Go down

ஹாலிவுட் படத்தில் கமல் ஹாசன் Empty ஹாலிவுட் படத்தில் கமல் ஹாசன்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:24 pm

சென்னை, ஜூன் 11: ஹாலிவுட் படத்துக்கு கதை எழுதி, அதில் கதாநாயகனாக கமல் ஹாசன் நடிக்க உள்ளார்.

கமல் இயக்கி நடித்துள்ள "விஸ்வரூபம்' படத்தின் டிரெய்லர் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாதெமி விழாவில் வெளியிடப்பட்டது.

அந்த விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கமல் கூறியதாவது:

சர்வதேச அளவில் எனக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது தமிழ்ப் படங்கள்தான். அதை எப்போதும் மறக்க மாட்டேன். இப்போது எனக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அது குறித்த ஒப்பந்தம் குறித்து முடிவு செய்ய சிங்கப்பூர் சென்றிருந்தேன்.

நான் நடித்த தமிழ்ப் படங்களை குறிப்பாக "விஸ்வரூபம்' படத்தை பார்த்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் ஹாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பேரி ஆஸ்போன் "மேட்ரிக்ஸ்', "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்', "கிரேட் கேட்ஸ்பி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

நான் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தில் கதை எழுதும் பொறுப்பையும் நானே ஏற்றுள்ளேன். நான் கூறிய கதையைப் படமாக்க சம்மதித்ததோடு முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார் பேரி ஆஸ்போன்.

இந்தப் படத்தின் தயாரிப்பில் எங்களுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ஈடுபடவுள்ளது.

இந்தப் படம் உலகத் தரத்திலான ஒரு ஜனரஞ்சகப் படமாக இருக்கும்.

ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களையும் என்றும் மறக்க மாட்டேன். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்றார் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum