தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்

Go down

ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன் Empty ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்

Post  ishwarya Mon Mar 11, 2013 1:51 pm

ஹாலிவுட்டின் பிரபல தயா‌ரிப்பாளர் Barrie Osborne தயா‌ரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். சிங்கப்பூ‌ரில் நடந்த ஐஃபா விழாவில் கமல்ஹாசன் இதனை‌த் தெ‌ரிவித்தார்.

Barrie Osborne ஹாலிவுட்டின் பிரபல தயா‌ரிப்பாளர். பீட்டர் ஜாக்ஸனின் லார்ட் ஆஃ‌ப்தி ‌ரிங்ஸை தயா‌ரித்தவர். இது ஒரு படம், இதேபோல் பல படங்கள் தயா‌ரித்தவர். ஹாலிவுட்டின் டாப் வ‌ரிசையில் அமர்ந்திருப்பவர். கமல்ஹாசனின் பாஷையில் சொன்னால் ஹாலிவுட்டின் சாம்பியன்கள் அனைவருடனும் பணியாற்றியவர் உதாரணமாக பிரான்ஸ் ஃபோர்ட் கப்போலோ.

கமலின் வி‌‌‌ஸ்வரூபம் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட பே‌ரி அதனை பார்க்க ஆர்வம் காட்டியிருக்கிறார். அமெ‌ரிக்கா சென்ற கமல் தனது படத்தை அவருக்கு திரையிட்டு காட்டியுள்ளார். படம் அவருக்குப் பிடித்து‌ப் போயிருக்கிறது. இனி பே‌ரியின் வார்த்தையில் மீதியை கேட்போம்.

கமல்ஹாசன் போன்ற ஒரு நடிகரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இலக்கியம், சினிமா குறித்த விஷயங்களில் அவர் ஒரு என்சைக்ளோபீடியா. இந்தியன் ஹிஸ்ட‌ரியும், கலாச்சாரமும் இணைந்த கதையை ஹாலிவுட் பாணியில் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். என்ன கதை என்பதற்கான ஐடியாவையும் கமல்தான் தந்தார். இது உலகை மையப்படுத்திய படமாக இருக்கும் என தெ‌ரிவித்துள்ளார்.

ஒரு நடிகராக இந்தப் படத்தில் நடிக்க தயார், ஒரு கதாசி‌ரியராக கதையை எழுதவும் தயார், இயக்குனராக படத்தை இயக்கக் கேட்டால் அதற்கும் தயார் என கமல் தெ‌ரிவித்துள்ளார்.

விரைவில் கமல் ஹாலிவுட் கமலாகப் போகிறார். வாழ்த்துகள் பாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum