தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலமானார் நடிகர் நரசிம்மன்

Go down

காலமானார் நடிகர் நரசிம்மன் Empty காலமானார் நடிகர் நரசிம்மன்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:28 pm



சென்னை,அக்.28: பிரபல குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் (படம்) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு வயது 71.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் 400-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்தார்.

ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்திலுடன் இணைந்தும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நரசிம்மன் நடித்து

வந்தார். நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum