தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் லூஸ் மோகன் காலமானார்

Go down

நடிகர் லூஸ் மோகன் காலமானார் Empty நடிகர் லூஸ் மோகன் காலமானார்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:16 pm



சென்னை, செப். 16: பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் (84) உடல் நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது மகன் கார்த்திக் வீட்டில் வசித்து வந்த லூஸ் மோகன், சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

70 வருட கலைப்பயணம்: 14 வயதில் நாடகத் துறையின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய லூஸ் மோகன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர்.

பி.யு.சின்னப்பா நடித்த "ஹரிச்சந்திரா' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். "ரோசாப்பூ ரவிக்கைக்காரி' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட அவர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் உள்பட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். "மகராசன்' திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்துக்காக, அவருக்கு சென்னை வட்டார மொழியைக் கற்றுக் கொடுத்தவர் லூஸ் மோகன். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

அவரது மனைவி பச்சையம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மறைந்த லூஸ் மோகனுக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். அவரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை மயிலாப்பூர் மின் மயானத்தில் நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum