தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ வடிவுடையம்மன் கோவில் (திருவொற்றியூர்)

Go down

ஸ்ரீ வடிவுடையம்மன் கோவில் (திருவொற்றியூர்) Empty ஸ்ரீ வடிவுடையம்மன் கோவில் (திருவொற்றியூர்)

Post  meenu Fri Jan 18, 2013 12:14 pm

திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது. அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம்.

பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாப விமோசனமளிக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது. ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான். இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களை பெற்றான்.

அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தான பெயரும் உண்டு. இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்கு தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளை பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.

இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளை பெற்றனர்.

நந்தி தீர்த்தம், பிரும்ம தீர்த்தம்::

அடியவர்கள் நீராடிய திருக்குளங்கள், உள்ளே இருப்பது நந்தி தீர்த்தம் என்றும், வெளியே இருப்பது பிரும்ம தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.

மதுரையையும், கோவலனையும் இழந்து கண்ணகி சினத்துடன் வந்து இறைவனிடம் தாகம் தணிய நீர் கேட்டவுடன் சிவனால் அருந்தச் சொன்ன திருக்குளமும் இதுதான். இந்த ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனாக கண்ணகி புற்றிடம் கொண்ட ஈசனுக்கு வடக்கே பளபளப்புடன் இருக்கும் ஆதி லிங்கத்தை தரிசிப்பதை காணலாம்.

கார்த்திகை பௌர்ணமிக்கு அடுத்த இரண்டு நாட்கள் புற்றில் சாற்றிய கவசத்தினை அகற்றி விடுவார்கள். அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

மற்ற பெயர்கள்::

சுவாமிக்கு ஆதிபுரீஸ்வரர், மாணிக்கத் தியாகர், தியாகேஸர், எழுத்தறியும் பெருமான் என்ற திருநாமங்கள் பலவுண்டு. ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத்தியாகர் என்ற பெயர் வந்தது. அம்பாள் வடிவுடையம்மன், வடிவாம்பிகை என்ற திருநாமங்களுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

பயன்கள்::

பௌர்ணமி நாளன்று மேலூர் அம்பாளையும், ஒற்றியூர் வடிவாம்பிகையையும், திருமுல்லைவாயில் அம்பாளையும் தரிசித்தால் வாழ்வில் மேன்மையடையலாம்.

அதே போல ஒரே நாளில் திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும் தரிசித்தால் வாழ்வு சிறக்கும்.

சுக்கிர தசை, புத்தி நடைபெறுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் மேலும் வளம் பெறலாம். சுக்கிர தோஷமுள்ளவர்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum