தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ வித்யாம்பிகை கோவில்

Go down

ஸ்ரீ வித்யாம்பிகை கோவில் Empty ஸ்ரீ வித்யாம்பிகை கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:08 pm

1300 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் காமேஸ்வரன் என்ற சிவபக்தனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. அதனை வைத்து சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தான். அதே ஊரில் விஸ்வம் என்பவர் வாசுகி என்ற வளர்ப்பு மகளுடன் வாழ்ந்து வந்தார்.

வாசுகியும், காமேஸ்வரனும் ஆலயத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து மையல் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் விஸ்வம் அதற்கு மறுத்து விட்டார். ஆனால் இருவரும் அனுதினமும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு நாள் ஈசனும், தேவியும் ஆலய அர்ச்சகரான பரமேஸ்வரின் தோற்றத்தில் வந்து விஸ்வத்திடம், வாசுகியையும் காமேஸ்வரனையும் ஆலயத்திற்கு அழைத்து வரச் செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். காமேஸ்வரன், வாசுகியின் கழுத்தில் மஞ்சள் தாலி கட்டினான்.

சிவனும், பார்வதியும் கல்யாண கோலத்தில் காட்சி தந்தனர். இறைவனே, தனது பக்தனுக்கும், பக்தைக்கும் மணம் முடித்து வைத்ததால், இந்த தலம் மணமுடிச்ச நல்லூர் எனப்பெயர் பெற்றது. அன்று முதல் இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள ஈஸ்வரன் அந்த ஆலய அர்ச்சகர் பெயராலேயே பரமேஸ்வரர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.

ஈசனுக்கு பீமேஷ்வர் என்ற பெயரும் உண்டு. அம்பிகை மூன்று தேவியர்களின் ரூபமாக ஸ்ரீவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கி.பி.1800 ஆம் வருடம் இந்த ஊரில் வைணவ நெறியை பரப்பும் வகையில் ஸ்ரீமான் அப்பாரியர் சுவாமிகள் வாழ்ந்து வந்த போது பெருமாளின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை ஓலைச்சுவடிகள் மூலம் ஒன்று சேர்த்து அச்சு வடிவம் செய்ய உதவினார். இந்த ஆன்மீகப்பணி இந்த தலத்தில் முடித்து வைத்ததால் இந்த ஊர் முடிச்சூர் என்னும் பெயர் பெற்றது.

ஆலய சிறப்பு :

இந்த ஆலயத்தில் தாமோதரப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருட்காட்சியளிக்கிறார். சைவமும் வைணவமும் ஒன்று சேர்ந்து ஹரியும் சிவனும் ஒன்று என்ற மனப்பான்மையை உண்டாக்குகிறது.

எந்த தோஷத்தினாலும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இந்த ஆலயம் வந்து ஸ்ரீவித்யாம்பிகையை வணங்கி பக்தியுடன் மஞ்சள் தாலி கயிறு (சரடு) கட்டினால் மிக விரைவில் திருமணம் கைகூடும் என்பது திண்ணம்.

பல்லவர் காலத்துச் சிற்பக் கலைக்கு உதாரணமாகத் திகழும் இந்த ஆலயத்தில் சிவன், பைரவர், சிவசூரியன், முருகன் ஆகிய மூர்த்திகள் அபூர்வ ஓசை தரும் சந்திரகாந்த கற்களால் ஆனவர்கள். ஆகவே இது ஒரு சந்திரஷேத்திரமாகும்.

சந்திரனை இங்கு வந்து வணங்கி தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum