சென்னைக் கோயில்கள் : திருவொற்றியூர் தியாகராஜர்
Page 1 of 1

பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவிய தலமாதலால், இது,
திருவொற்றியூர் ஆயிற்று. சுந்தரரின் காதலுக்கு, தானே தூது சென்று,
சுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருமணத்தை இங்கிருக்கும் மகிழ மரத்தடியில்
இறைவனே நடத்தி வைத்த தலம். கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு திருவருள் புரிந்த
வட்டப்பாறை அம்மன், வரப்பிரசாதியாய் இத்தலத்தில் தனி சந்நதி கொண்டுள்ளாள்.
மூலவர் படம்பக்கநாதர் எனும் புற்றிடங்கொண்டாரின் சந்நதி ஆண்டு முழுதும்
வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள்
மட்டுமே கவசமில்லாது தரிசனமளிக்கும். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும்
அதிபதிகளாய் 27 நட்சத்திர லிங்கங்களை பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
பிரம்மா,
விஷ்ணு, சிவன் மூவரையும் ஓருருவம் கொண்ட ஏகபாத மூர்த்தியாக இத்தலத்தில்
காணலாம். அம்பிகை வடிவுடையம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை
செய்யப்படுவது சிறப்பு. இத்தலத்தில் தியாகராஜர் எனும் பெயரில் நடராஜப்
பெருமான் அமர்ந்த நிலையில் அஜபா நடனமாடுகிறார். பட்டினத்தார் ஜீவசமாதி
அடைந்த தலம். மாசி மகத்தன்று இத்தலத்தில் தியாகராஜரின் 18 வகை
திருநடனங்களையும் கண்டு களிக்கலாம்.
பௌர்ணமி அன்று ஒரே நாளில்
பேரூரிலுள்ள திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன்,
திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மூவரையும் வணங்குவது சிறப்பானதாகக்
கருதப்படுகிறது. விளக்கேற்றி சிவகைங்கரியம் செய்து வந்த கலியநாயனார்
ஒருமுறை விளக்கேற்ற எண்ணெய் இல்லாமல் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கத் துணிந்த
போது இத்தல ஈசன் அவரை தடுத்தாட்கொண்டார். ஆலயத்திற்கு வெளியே
வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியை
தரிசிக்கலாம். சென்னைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது,
திருவொற்றியூர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சென்னைக் கோயில்கள் : திருவொற்றியூர் தியாகராஜர்
» சிறப்புமிகு சென்னைக் கோயில்கள்
» ஸ்ரீ வடிவுடையம்மன் கோவில் (திருவொற்றியூர்)
» இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்
» மெட்ரோ ரயில் திட்டம்: திருவொற்றியூர் வரை நீட்டிக்கக் கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum