தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்

Go down

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் Empty ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்

Post  amma Sat Jan 12, 2013 3:36 pm

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்த நல்லாத்தூரில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலின் சிறப்பே திருமண பாக்கியம் தருவது தான்.

இந்த கோவிலுக்கு வந்து ஆண்டாள் மாலை வாங்கிச்செல்பவர்களுக்கும், 8 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து கொள்பவர்களுக்கும் திருமண பாக்கியம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

மேலும் ஸ்ரீராம நவமி உற்சவத்தின் 10-வது நாள் நடைபெறும் ஸ்ரீ சீதை காப்பு கயிறு கட்டிச் செல்லும் ஆண், பெண் இருபாலருக்கும் திருமண தோஷம் நீங்கி உடனே திருமணம் நடைபெறுகிறது.

இவ்வாறு கோவிலுக்கு வந்து திருமண தோஷம் நீங்கி திருமணம் நடந்தேரியவர்கள் திருமணம் முடிந்து மணமாலையோடு தம்பதி சகிதம் வந்து பெருமாளின் திருவடியில் விழுந்து நன்றி செலுத்துவது இங்கு வழக்கமாக நடைபெறுகிறது.

இப்படி நன்றி செலுத்துபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. நல்லாத்தூருக்கு புதுச்சேரி, விழுப்புரம், கடலூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum