நரசிம்மர் ஆலயம்
Page 1 of 1
நரசிம்மர் ஆலயம்
சென்னை ராமாபுரத்தில் பாமையும், புராண கீர்த்தியும் பெருமையும் கொண்ட நரசிம்மர் ஆலயம் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையோடு திகழும் இத்திருக்கோவில் திருமால் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவோண நாயகர் ஆவார்.
அரசாட்சியிலும், புலமையிலும் தெய்வீக ஆசார அனஷ்டாணங்களில் முழு ஈடுபாடு கொண்ட ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர் கிருஷ்ண தேவராயரே தினந்தோறும் வந்து வழிபட்ட ஸ்தலம். இக்கோவிலில் எழுந்தருளி உள்ள திருவோண நாயகன் ஸ்ரீலஷ்மி நரசிம்மர் வேண்டியதை வேண்டியபடி, நினைத்ததை நினைத்த படி அருள்வார்.
மன்னருக்கு வெற்றியையும், புகழையும், நீண்ட ஆயுளையும், அறிவுச் செறிவையும் புலமையையும் வாரி வாரித் தந்தவர். மன்னருக்கு மட்டுமல்ல மக்களின் கடைக்கோடி பக்தனுக்கும் தம் அருள் பார்வையை செலுத்தியவர். இக்கோவில் பழமையில் இருந்து புதுமைக்கு வரத் தொடங்கி 1982-ம் ஆண்டு முதல் திருப்பணி துவங்கி 1983 மார்ச் மாதம் முதல் கும்பாபிஷேகம் மிக கீர்த்தியாய் வேத முறைப்படி நடந்தேறியது.
அதன் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் கலையழகுடன் காண்பர் கண்கசிய, உள்ளம் பக்தியில் நெகிழும் வண்ணம் 1994-ம் ஆண்டு அஷ்டலட்சுமி மண்டபம் ஸ்தாபித்து இரண்டாம் முறையாக மிக விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.
ஸ்ரீநரசிம்மரின் தெய்வீக அருட்பார்வையிலும், அருளின் மேன்மையாலும், அவர் புரியும் சக்தியின் வீச்சில் பலன் அடைந்த பல்லோர் கூடி மேலும் மேலும் இப்பெருமானுக்கு புகழ் சேரும் வண்ணம் அடுத்து 1995-ம் ஆண்டு இத்தலத்திற்கு நீண்ட நெடி துயர்ந்த செம்பினால் ஆன கொடிக்கம்பம் நிறுவினர்.
அதில் சுவாமியின் அருளாட்சி புகழ் கொடி, பூலோக மாந்தரின் கவலை, துயர் நீக்கி நிம்மதி, சாந்தி தந்து காற்றினில் பரவசமாய் பறக்கின்றது. இத்திருவிழா நாட்களில் கலந்து கொண்டு திருவோண நாயகனை வழிபட நினைத்தது நினைத்தபடி நடக்கும். எண்ணிய எண்ணம் யாவும் நடந்தேறும்.
திருக்கோவிலின் மகிமை:
1. இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாரிய சித்தி ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மட்டையுடன் கூடிய தேங்காயை தாங்கள் நினைத்த காரியம் கை கூட வேண்டுமென்று பிராத்தனை செய்து வேண்டிக் கொண்டு தேங்காயை கட்டினால் முப்பது நாட்களுக்குள் நினைத்த காரியம் நடக்கும். அதற்கு இந்த ஸ்ரீகாரிய சித்தி ஆஞ்சனேயர் அருள் புரிவார். நினைத்த காரியம் நிறைவேறிய உடன் மட்டை தேங்காயை உரித்து, ஆஞ்சநேயரை சுற்றி சூறைத்தேங்காய் விட வேண்டும்.
2. இத்திருக்கோவிவலில் எழுந்தருளி இருக்கும் சந்தான கிருஷ்ணன் உற்சவ மூர்த்தியை கையில் ஏந்தி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யும்வரை வகையில் வைத்திருந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
போக்குவரத்து வசதி:
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி அதிகம் உள்ளது. வடபழனி, பூந்தமல்லி மார்க்கம் செல்லும் பஸ்சில் வளசரவாக்கம் நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிட நடை பயணத்தில் வரலாம். கிண்டி, பூந்தமல்லி மார்க்கம் செல்லும் பஸ்சில் மொகலிவாக்கம் நிறுத்தத்தில் இறங்கியும் வரலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
» ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்
» பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில்
» லட்சுமி நரசிம்மர் துதி
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
» ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்
» பூவரசன்குப்பம் நரசிம்மர் கோயில்
» லட்சுமி நரசிம்மர் துதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum