அறம்வளர்த்த நாயகி அம்மன்
Page 1 of 1
அறம்வளர்த்த நாயகி அம்மன்
ஆலகால விஷத்தை பருகிய போது உலகில் அறத்தை காக்க இடது காலை முன்வைத்து வலது காலை பின் வைத்து தன் மலர்கரங்களால் நஞ்சினை நிற்க வைத்தவள் அறம் வளர்த்த நாயகி. கோயம்பேட்டையும் அசுரன் ஒருவன் ஆட்சி செய்து இருக்கிறான். அப்போது அறநெறியோடு மக்கள், மகிழ்ச்சியுடனும், இன்பமுடனும் வாழ்ந்தது அசுரனின் மனதில் பொறாமைத் தீயை வளர்த்தது.
மக்கள், தேவர், முனிவர்கள் ஆகியோரைத் துன்புறுத்தினான். நல்வழியில் அமைதியுடனும், சிறப்புடனும் வாழவிடாமல் கொடுமைப்படுத்தினான். அதர்ம நெறியில் நிலவுலகை ஆட்டிப் படைத்தான். அசுரனின் துன்பத்திற்கு ஆளான மக்கள் பெரும் வேதனைப்பட்டு, அன்னையிடம் சென்று முறையிட்டனர். அன்பர்களின் அடிமைத் துன்பத்தை நீக்க, அறம் வளர்த்த நாயகி புறப்பட்டாள்.
அவனை அழித்து உலகம் நன்மை பெற வேண்டுமானால் இடது திருவடியை முன்வைத்து, வலது திருவடியைப் பின்நிறுத்தி வெற்றி காண விரும்பினாள். அவ்வண்ணமே நின்று வெற்றி கண்ட திருவடி நிலையே, அறம் வளர்த்த நாயகியின் வடிவமாகும்.
அந்த திருவடி நிலையைத்தான் கோயம்பேட்டில் இன்றும் காண்கிறோம் என்றும் காண்போம். இத்திருத்தலத்தில் அறம் வளர்த்த நாயகியை நாள்தோறும் வழிபட்டால் துன்பம் தூசாய் மறைந்து போகும். திருமண தடைகள் நீங்கும், தீராத வழக்குகள், வியாதிகள், துன்பங்கள் விரைவில் நீங்கும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» “உலக நாயகி” தேவயானி
» நந்திபுரத்து நாயகி
» உதயநிதிக்கு பிடித்த நாயகி?
» பாரதிராஜாவின் புதிய நாயகி!
» சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி!
» நந்திபுரத்து நாயகி
» உதயநிதிக்கு பிடித்த நாயகி?
» பாரதிராஜாவின் புதிய நாயகி!
» சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum