தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதிக்கு பிடித்த நாயகி?

Go down

உதயநிதிக்கு பிடித்த நாயகி? Empty உதயநிதிக்கு பிடித்த நாயகி?

Post  ishwarya Tue Mar 26, 2013 5:02 pm



சினிமா இயக்குநர்கள், பாடகர்கள், இயக்குநர்களின் பிள்ளைகள், நடிகரின் பிள்ளைகள், நடன இயக்குநர்கள், ஸ்டன்ட் மாஸ்டர்களின் பிள்ளைகள் என பலரும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் போது தயாரிப்பாளரான உதயநிதிக்கு ஹீரோ ஆசை வந்ததில் தவறில்லையே.

உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்கலாம் என்று தோன்றியதும் தொலைபேசியில் கேட்டுக் கொண்டு நேரடியாக சென்றோம்.


நடிப்பது குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு,

நடிகர் அவதாரம் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நடிப்பதற்கு முழு ஒத்துழைப்பும் இயக்குநர் ராஜேஷ்தான் தருகிறார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே, என்னை தனியாக நடிக்க வைத்து அதனை ஹேன்டி கேமராவில் படம் பிடித்துக் கொண்டார். அதோடு விட்டுவிடாமல், அதனை எடிட் செய்து திரையிட்டுக் காண்பித்தார். எங்கெங்கு எனது நடிப்பை திருத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்புகள் கொடுத்தார். நிச்சயமாக அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார் உதயநிதி.

நடிக்கும் ஆர்வம் வந்தது எப்படி?

ஏதோ இப்படத்தில் திடீரென நடிக்க வந்துவிடவில்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க பேசி முடித்து புகைப்படம் எடுக்கும் பணிகள் கூட நடந்தன. ஆனால் பல்வேறு காரணங்களினால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இயக்குநர் ராஜேஷின் சிவா மனசுல சக்தி படத்தை பார்த்ததும், இதுபோன்ற காதல் மற்றும் நகைச்சுவை படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவரை தொடர்பு கொண்ட போதே, அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் துவக்கிவிட்டிருந்தார். எனவே அந்த படம் முடியும் வரை காத்திருந்து இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

படப்பிடிப்பு நேரம் எவ்வாறு உள்ளது?

நடிப்பது எனக்கு மிகவும் புதிது. அதனால்தான் மிகவும் லேசான நகைச்சுவை கலந்த ரொமான்டிக் கதையாக தேர்வு செய்தேன். ஒரு காதல் ஒரு காண்ணாடி படக்குழுவினருடன் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. எப்போதும் கடினமாக உணர்ந்ததே இல்லை. ஆனால் எனக்கு டான்ஸ் மட்டும் கஷ்டமாக உள்ளது.

அடுத்த படத்தில் உங்களுக்கு யார் ஜோடியாக வர வேண்டும்?

இந்த கேள்விக்கு எந்த யோசனையும், மறுப்பும் இல்லாமல் உடனடியாக உதயநிதியிடம் இருந்து பதில் வருகிறது. நிச்சயமாக எனது அடுத்த படத்திலும் ஹன்சிகாவுடனே பணியாற்ற விரும்புகிறேன். மிகவும் தோழமையாக பழகுகிறார் என்றார்.

படம் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களுடன் விடை பெற்றோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum