சினிமாவை கிராமத்துக்கு அழைத்து வந்ததே சாதனை: இயக்குநர் பாரதிராஜா பெருமிதம்
Page 1 of 1

சினிமாவை எனது கிராமத்துக்கு அழைத்து வந்ததை சாதனையாகக் கருதுகிறேன், என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற அவரது 50 ஆவது திரைப்படத்தின் இசைக் குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
எனது திரைப்படத்தின் இசைக் குறுந்தகடு வெளியீட்டு விழாவை, மதுரையில் நடத்துவதற்குக் காரணம் உள்ளது. தமிழ்ச் சங்கம் வைத்து, தமிழை வளர்த்த மதுரை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. இங்கிருந்து திரைப்படத்துறைக்குச் சென்ற கலைஞர்கள் பலர் உலக அளவில் பெருமை பெற்றுள்ளனர்.
மதுரை மண் எனது மண். இங்குள்ள மக்கள் எனக்கு கலாசாரப் பிச்சை அளித்தனர். இங்கு, கடலைக் காட்டில் எனக்கு கதை கூறியவர்களைக் கூட நான் ஆசிரியராகவே நினைக்கிறேன். சினிமா என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றது. அந்த சினிமாவை நான் கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளேன். அதுவே சாதனை.
எனது முதல் படத்தை தயாரித்தபோது, அதில் நாகேஷ் உள்ளிட்டோரை நடிக்க வைக்கத் திட்டமிட்டேன். பின்னர், கமல், ரஜினி நடிப்பது என முடிவானது. எனவே, எனது கலைப் பயணத்தைத் தொடங்கிய மதுரையிலேயே எனது அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தின் இசைக் குறுந்தகடு விழாவை நடத்துவதில் பெருமைப்படுகிறேன் என்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாக்கியராஜ், இயக்குநர் பாரதிராஜாவுக்கு கோபம் அதிகம். ஆனால், அதுவே அவரது பலம், பலவீனமாகும். நான் தற்போது துணை முதல்வர் அன்னபோஸ்ட் என்ற படத்தை நீண்ட நாளுக்குப் பிறகு இயக்குகிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், இசைக் குறுந்தகட்டை இளையராஜா வெளியிட, அதனை இயக்குநர் பாலுமகேந்திரா பெற்றுக் கொண்டார்.
இதில், தயாரிப்பாளர் ராஜ்கண்ணு, இயக்குநர்கள் மகேந்திரன், சுந்தர்ராஜன், சந்திரசேகரன், பார்த்திபன், சுசீந்திரன், சற்குணம், நடிகர்கள் சத்தியராஜ், நடிகை ராதிகா, ராதா மற்றும் அவரது மகளான அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் நாயகியுமான கார்த்திகா, நடிகர் சிவா, நடிகை சரண்யா, சித்ரா லட்சுமணன், ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், பாரதிராஜா குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, அரசரடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே
» மணிரத்னம் மகனை ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்லும் கமல்?!
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன்
» தமிழ் சினிமாவை பார்த்து வியக்கிறேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum