தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன்

Go down

உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன் Empty உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:02 pm

ஃபிக்கி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) திரைப்பட இயக்குநர் கே.ஹரிஹரன், ஃபிக்கியின் தலைமை நிர்வாகி முராரி, நடிகர் கமல்ஹாசன், திரைப்படத் தயாரிப்பாளர் தியாகராஜன், ஃபிக்கியின் ஊடகப் பிரிவு தலைமை நிர்வாகி லீனா.

இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி பயணிக்க செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் அதன் மூன்றாவது மாநாடு மற்றும் கருத்தரங்கம் அக்டோபர் 16, 17 தேதிகளில் சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. அதற்கான முறையான அறிவிப்பை ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக சேவை மனப்பான்மையுடன் மகாத்மா காந்தியால் 1927ஆம் ஆண்டு ஃபிக்கி தொடங்கப்பட்டது. ஃபிக்கியின் வரலாறு சுதந்திரப் போராட்டத்தோடும் இந்தியத் தொழில் வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஊடகம் மற்றும் கேளிக்கைத் துறையில் ஃபிக்கியின் கேளிக்கைப் பிரிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து பல நல்ல கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் பொழுதுபோக்குத் துறையின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தென்னிந்தியத் திரைப்படத் துறையினர் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பயன்பாடு, திரைப்படத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தற்போதைய உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஃபிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராஃபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்களை இந்த மாநாட்டில் அறிந்துகொள்ளலாம்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்துப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் சினிமா கலைஞர்கள் உள்பட ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். நான் இயக்கி நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தைத் தயாரிக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னும் கலந்துகொள்கிறார். சினிமா கலைஞர்கள் கூடுகிறார்கள் என்றவுடன் இதை ஏதோ ஒரு "ஸ்டார் நைட்' நிகழ்ச்சி என கருதிவிட வேண்டாம். நூறு ஆண்டுகளாக இந்திய சினிமாவை வளர்த்த முன்னோடிகளுக்கும் மூத்தோர்களுக்கும் சிறப்பு செய்யும் ஒரு கெüரவமான நிகழ்வு இது. இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி பயணிக்கச் செய்வோம்.

திரையுலகில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் திரையுலகில் கால்பதிக்க நினைப்பவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

மாநாட்டில் இடம்பெறும் பல்வேறு சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கான அடிப்படை விதிமுறைகள் குறித்து

ச்ழ்ஹம்ங்ள்.ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய்ஃச்ண்ஸ்ரீஸ்ரீண்.ஸ்ரீர்ம், ள்ஹம்ண்ழ்.ந்ன்ம்ஹழ்ஃச்ண்ஸ்ரீஸ்ரீண்.ஸ்ரீர்ம் ஆகிய இ-மெயில்கள் 011-23766929 என்ற செல்பேசியில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என ஃபிக்கி தெரிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum