சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே
Page 1 of 1
சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே
தோனி படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ருத்ரன் இயக்கும் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக் கிறார்.
ராதிகா ஆப்தேவுக்கும் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனடிக்குக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், செய்திகள் வெளியாயின. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ராதிகா ஆப்தே விலகப்போவதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ராதிகா ஆப்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
என்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவியுள்ளன. திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கிசுகிசுக்கிறார்கள். லண்டன் இசையமைப்பாளர் பெனடிக்குடன் எனக்கு தொடர்பு இருப்பது உண்மைதான். அது என் சொந்த விஷயம். திருமணம் செய்து கொண்டால் நான் படங்களில் நடிப்பது பாதிக்காது தொடர்ந்து நடிப்பேன். நிறைய படங்களில் நடிக்கதான் நான் இங்கே இருக்கிறேன்.
தமிழ் படங்களில் எனக்கு ஆர்வம் இல்லை என்றும், என்னை தொடர்பு கொள்வது சிரமம் என்றும் வதந்திகள் பரவியுள்ளது. இது தவறானவை. எளிதில் எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழில் தற்போது ‘வெற்றிச்செல்வன்’ படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக்கிறேன். அஜ்மல் ரொம்ப நட்பாக இருந்தார். பாடகர் மனோ முக்கிய கேரக்டரில் வருகிறார். நல்ல கதையம்சம் உள்ள படம்.
இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரைவில் திருமணம் - ராதிகா ஆப்தே
» படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல்
» திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் – ராதிகா ஆப்தே!
» திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன் – ராதிகா ஆப்தே
» கிளாமராக நடித்தால் தான் படம் கிடைக்கிறது!-ராதிகா ஆப்தே
» படப்பிடிப்பில் அஜ்மலுடன் ராதிகா ஆப்தே மோதல்
» திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் – ராதிகா ஆப்தே!
» திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன் – ராதிகா ஆப்தே
» கிளாமராக நடித்தால் தான் படம் கிடைக்கிறது!-ராதிகா ஆப்தே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum