தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னம் மகனை ஹாலிவு‌ட்டுக்கு அழைத்து செல்லும் கமல்?!

Go down

மணிரத்னம் மகனை ஹாலிவு‌ட்டுக்கு அழைத்து செல்லும் கமல்?! Empty மணிரத்னம் மகனை ஹாலிவு‌ட்டுக்கு அழைத்து செல்லும் கமல்?!

Post  ishwarya Fri Mar 29, 2013 5:27 pm

ஹாலிவுட்டில் படம் இயக்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், அந்தபடத்தில் மணிரத்னம் மகனையும் பணியாற்ற வைக்க எண்ணியுள்ளார். ஜனவரி 11ம் தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை பார்த்து பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பன், தனக்கு ஒருபடம் இயக்கும்படி கமலை கேட்டுகொண்டார். யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு கமல்ஹாசனுக்கு கிடைத்தது. விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் ஹாலிவுட் படத்தை இயக்க உள்ளார். பேரி ஆஸ்பனுடன், கமல் இணைந்து பணியாற்ற உள்ள உலக தரத்தில் உருவாகும் படத்தை பார்க்க அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் போகும் கமல், தன்னு‌டன் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியரின் மகன் நந்தனையும் உடன் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நந்தன், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum