தமிழ் சினிமாவை பார்த்து வியக்கிறேன்
Page 1 of 1
தமிழ் சினிமாவை பார்த்து வியக்கிறேன்
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற 10-வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட (இடமிருந்து) நடிகர் சிவகுமார், திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், விருது வழங்கிய நடிகர் அமிதாப்பச்சன், பத்திரிகையாளர் ராம், இயக்குநர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், சாந்தகுமார், பிரபுசாலமன், சாட்டை அன்பழகன்.
நேர்மை, உழைப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை உள்ளிட்ட குணங்களால் நிரம்பி, இந்திய சினிமாவை ஈர்க்கும் தமிழ் சினிமாவைப் பார்த்து வியப்பதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கிய 10-வது சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கினார். தமிழில் வெளிவந்த மெüன குரு, பீட்சா, சாட்டை, வழக்கு எண் 18/9 ஆகிய திரைப்படங்களின் இயக்குநர்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது: இது போன்ற திரைப்பட விழாக்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சினிமாவில் பட விழாக்கள் ஒரு பகுதியாகிவிட்டன. இந்த படவிழாவில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதாக அறிந்தேன். உண்மையிலேயே அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பெண்களுக்கு சமுதாயத்தில் 50 சதவீத பங்கு இருக்கிறது.
ஆனால், பெண்களுக்கு எதிராக அண்மையில் நடக்கும் செயல்கள் என் மனதை பதறச் செய்கிறது. தமிழ் சினிமாவில் எல்லோருமே ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதற்கு இந்தப் படவிழா சிறந்த உதாரணம். சின்ன சின்ன விஷயங்கள்கூட மிகுந்த சிரத்தையுடன் செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான விஷயங்கள் மும்பையில் நடக்காது. தென்னிந்திய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் நான் வேலை பார்த்து இருக்கிறேன். அனைவரும் சிறந்த படைப்பாளிகள்.
உண்மையைச் சொல்ல வெண்டுமானால் தமிழ் சினிமா இல்லாமல் நாங்கள் இல்லை. இயக்குநர்களின் மிகச் சிறந்த மூளை, உழைப்பு, எல்லாம் பாராட்டப்பட வேண்டியது. உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை எல்லாவற்றிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. இது பாலிவுட்டில் இல்லை. இது போன்ற படவிழாக்களுக்கு என்னை ஆண்டுதோறும் அழைத்தால் சின்ன சின்ன வேலைகள் செய்து என்னையும் இதில் இணைத்துக் கொள்வேன் என்றார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.11 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் நடிகர் அமிதாப்பச்சன் மேடையில் அறிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்!- சூர்யா
» தமிழ் சினிமாவை உலகமே பெருமையாகப் பேசுகிறது! – கே.பாலச்சந்தர்
» தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: ஆர்யா பரபரப்பு பேச்சு.
» உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன்
» சினிமாவை விட்டு விலகலா? -ராதிகா ஆப்தே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum