தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Go down

விஸ்வரூபம் பட விவகாரம்:  கமல்ஹாசனிடம் விசாரணை  நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Empty விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:09 pm

விஸ்வரூபம் படத்தில் முல்லா ஓமர் பற்றி கூறியுள்ள விஷயங்கள் குறித்து, நடிகர் கமல்ஹாசனிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.எழிலரசு இம்மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:
கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஜன. 25-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், சில அமைப்புகள், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி ஜன. 22-ல் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அவ்வாறு தடை செய்யப்படவில்லையெனில், மேற்படி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
மேற்குறிப்பிட்ட அமைப்பினரின் நெருக்குதல் காரணமாக, தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் பார்வையிட்டு, அவர்கள் சான்று வழங்கிய பிறகே பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்படியிருக்க, மேற்குறிப்பிட்ட அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதிக்க நிர்பந்தம் செய்வது ஏற்புடையதல்ல. இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இதற்கு முன்பு துப்பாக்கி திரைப்படத்துக்கும் இதேபோல, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சில காட்சிகளை நீக்குவதற்கு நிர்பந்தம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் திரையிடப்பட்ட திரைப்படத்துக்காக, சில அமைப்புகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகவே, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தேன். இருப்பினும், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விஸ்வரூபம் திரைப்படத்தை நீதிமன்றத்தில் திரையிட இந்திய திரைப்படத் துறைக்கும், படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கும் உத்தரவிட வேண்டும்.
இத் திரைப்படத்தைப் பார்வையிட்டு அனுமதிப்பதற்கோ, தடை விதிப்பதற்கோ நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், இத் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முல்லா ஓமர், மதுரை மற்றும் கோவையில் ஓராண்டு தங்கியிருந்ததாகக் கூறப்படும் விஷயத்தில் கமல்ஹாசனிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இம்மனு செவ்வாய்க்கிழமை (ஜன. 29) விசாரணைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர் நீதிமன்றத்தில் நாளை திரையிடப்படுகிறது விஸ்வரூபம்: 28-க்கு வழக்கு ஒத்திவைப்பு
» கமலின் விஸ்வரூபம் பட விவகாரம் போட்டி கமிஷனில் விசாரணை தீவிரம்
» விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
» உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'
» துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum