கமலின் விஸ்வரூபம் பட விவகாரம் போட்டி கமிஷனில் விசாரணை தீவிரம்
Page 1 of 1
கமலின் விஸ்வரூபம் பட விவகாரம் போட்டி கமிஷனில் விசாரணை தீவிரம்
‘விஸ்வரூபம்‘ பட வெளியீடு தொடர்பாக இந்திய போட்டி கமிஷனில் கமல்ஹாசன் கொடுத்த புகாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதன் இறுதி விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில் வெளியாகிறது. விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக, டிடிஎச்.சில் வெளியிட கமல் முடிவு செய்திருந்தார். தமிழக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியின்றி படத்தை தியேட்டரில் கமல் வெளியிட்டார். தனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததாக தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு எதிராக இந்திய போட்டிக் கமிஷனில் (காம்படிசன் கமிஷன் ஆஃப் இந்தியா) புகார் செய்தார். இந்த கமிஷன் புகார் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியது. ‘எந்த ஒரு படமும் முதலில் தியேட்டர்களில் திரையிடாமல், டிடிஎச் அல்லது எந்த ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் வெளியிட்டால் அதை தியேட்டர்களில் திரையிடமாட்டோம்‘ என்று தியேட்டர்கள அதிபர்கள் சங்கம் தெரிவித்திருந்த கருத்தை கமிஷன் எடுத்துக்கொண்டது. இதில் விசாரணைக்கான அடிப்படை முகாந்திரம் உள்ளதாக அக்கமிஷன் தெரிவித்துள்ளது. குறைந்த செலவில் வீட்டிலிருந்து படம் பார்க்கும் வாய்ப்பை அச்சங்கம் தடுக்கிறது என்றும் நியாயமான வர்த்தகப் போட்டியை தடுக்கும் முறைகேடுகளை விசாரிக்கும் ஒழுங்கு முறை ஆணையமான இந்திய போட்டி கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை இம்மாத இறுதியில் வெளியாகும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
» விஸ்வரூபம்: போட்டிக் கமிஷனில் நடிகர் கமல்ஹாசன் புகார்
» பொங்கல் விருந்தாக வருகிறது கமலின் விஸ்வரூபம்!!
» விஸ்வரூபம் கமலின் விளக்கம்
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum