துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
துப்பாக்கி திரைப்படம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்பு அளித்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலித்து மார்ச் 31-ம் தேதிக்குள் முடிவினை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரஹீம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆகவே, அந்த திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம்.
எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, படத்துக்கான சான்றிதழை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அப்துல் ரஹீம் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். துப்பாக்கி படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கும்போது திரைப்பட தணிக்கை வாரியம் வெறும் இயந்திரத்தனமாக செயல்பட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், ஆகவே அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசிடம் மனுதாரர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த ஒரு சான்றிதழ் சரியாக அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
ஆகவே, கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை மறு ஆய்வு மனுவாக கருதி மத்திய அரசு அதனைப் பரிசீலிக்க வேண்டும். சட்டப்படியான பரிசீலனையை முடித்து, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த மனு தொடர்பான முடிவினை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» சிங்கமுத்து விவகாரம்: விளக்கம் தர வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
» துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum