தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டைப் படத்துக்காக நடனமாடியுள்ள பிரேம்ஜி

Go down

சேட்டைப் படத்துக்காக நடனமாடியுள்ள பிரேம்ஜி Empty சேட்டைப் படத்துக்காக நடனமாடியுள்ள பிரேம்ஜி

Post  ishwarya Fri Mar 22, 2013 2:45 pm



நடிகராகவும், இயக்குநராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றுவது ஒரு சிலரால்தான் முடியும். அவர்களில் ஒருவர் தான் பிரேம்ஜி அமரன்.

பிரியாணி படத்தை இயக்கிக் கொண்டே, ஆர். கண்ணன் இயக்கும் சேட்டை படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி ஆகியோருடன் சேட்டை படத்தில் படு சேட்டை செய்து கொண்டிருக்கும் பிரேம்ஜி, அப்படத்துக்காக ஒரு குத்தாட்டத்தையும் போட்டுள்ளார்.

சில வெளிநாட்டு அழகிகளை இதற்காக வரவழைத்துள்ளனர். ராக்ஸ்டார் போல உடை அணிந்து கொண்டு தமாம் இசையில் உருவான பாடலுக்கு சூப்பராக நடனமாடி கலக்கியுள்ளாராம் பிரேம்ஜி.

இது குறித்து அவரிடமே கேட்போம். "பெரம்பூர் பின்னி மில்லில் இரண்டு செட்கள். காலையில் பிரியாணி படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு மதியம் சேட்டை படத்துக்கான படப்பிடிப்புக்கு வந்துவிட்டேன். காலை முதல் இரவு வரை இப்பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் மிக எளிதான நடனங்களை போடச் சொன்னதால் நான் தப்பித்தேன். ஆனால் இப்பாடல் நன்றாக வந்துள்ளது. படம் வெளியானதும், இப்பாடல் நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன் என்கிறார் நம்பிக்கையோடு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum