தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பியாவை லவ்வும் பிரேம்ஜி!

Go down

பியாவை லவ்வும் பிரேம்ஜி! Empty பியாவை லவ்வும் பிரேம்ஜி!

Post  ishwarya Fri Apr 26, 2013 12:57 pm

‘லந்துப் பார்ட்டி’யான பிரேம்ஜி, இப்போது லவ்வுப் பார்ட்டியாக மாறியிருக்கிறார். இவருக்கும் பியாவுக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட, இப்போது தனது ஃபேஸ்புக்கில் அதை வெளிப்படையாகவே அதை எழுதியுள்ளார் பிரேம்ஜி.

கோவா படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் துளிர்த்ததாம். பின்னர் ஒரு சுப நாளில் இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டார்களாம்.

இது குறித்து இப்படிச் சொல்கிறார் பிரேம்ஜி:

“நான் பியாவை லவ் பண்றது உண்மைதான். அவரும் என்னை அதே அளவு தீவிரத்துடன் காதலிக்கிறார். அவரை காதலிக்கும் விஷயத்தை நான்தான் முதலில் சொன்னேன். அதற்கு பியாவிடமிருந்து கிரீன் சிக்னல் வந்ததால்… காதல் தொடர்கிறது. இந்த பரவசத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை” என்கிறார் பிரேம்ஜி.

இந்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பூச்சாண்டி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum