சூர்யாவுடன் கலக்க வருகிறார் பிரேம்ஜி!
Page 1 of 1
சூர்யாவுடன் கலக்க வருகிறார் பிரேம்ஜி!
கோடம்பாக்கத்தின் தற்போதைய நம்பர் ஒன் காமெடியன் என்றால் சந்தானம்தான்! ஒருநாள் கால்ஷீட்டுக்கு 2 லட்சம் ஊதியம் வாங்குகிறார். சந்தானத்துக்கு அடுத்த நிலையில் இருப்பவர் விவேக் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சமாம் அவரது ஊதியம். இந்த இரண்டுபேருக்கு அடுத்த நிலையில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் வாங்கும் கேட்டகிரியில் யாரும் இல்லை என்பதுதான் ஆச்சர்யம்! தற்போது 'நண்பன்' படத்தின் மூலம் பட்டையைக் கிளப்பிய சத்யன், 'போராளி' மூலம் மறுபடியும் ஸ்கோர் செய்த 'வெண்ணிலா கபடிக்குழு' அறிமுகமான 'பரோட்டோ சூரி' வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் ஆகிய மூன்று பேரும் தற்போது மேலும் பிஸியாகி இருகிறார்கள். தற்போது இவர்கள் பதினைந்துநாள் கால்ஷீட்டுக்கு 7.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த சம்பள விவகாரம் ஒரு பக்கம் இருக்க, இந்த வளர்ந்து வரும் கமெடியன்கள், முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா ஆகியோருடன் கூட்டணி அமைத்து காமெடி செய்ய சம்பளம், கால்ஷீட் இவற்றில் தேவையான அளவு சமரசம் செய்து கொண்டு, நடிக்கத் துடிக்கிறார்களாம். தற்போது வெங்கட் பிரபு க்ரீன் ஸ்டூடியோவுக்காக இயக்க இருக்கும் படத்தில், சூர்யாவுடன் படம் முழுவதும் இருந்து காமெடி செய்யும் வாய்ப்பை, எந்த ஊதியமும் வேண்டாம் என்று கூறி, பிரேம்ஜி அமரன் கைப்பற்றி இருப்பதாகத் நம்பகமான தகவல் கிடைக்கிறது. இன்னோரு பக்கம் சிம்புவின் நெருங்கிய நண்பனாக இருக்கும் பிரேம்ஜி, ஒரு பைசாகூட வாங்காமல், யுவன் இசையில், ஒரு தமிழ் ரேப் பாடல் எழுதி பாடியும் கொடுத்திருக்கிறாராம் 'போடா போடி' படத்துக்காக. பிரேம்ஜின் இந்த செயலை மதிக்கும் விதமாக, அதே பாடலில் கெஸ்ட் அப்பியரன்ஸில் பிரேம்ஜியை நடிக்க அழைத்திருகிறார் சிம்பு. ஜி.... நீங்க நெசமாவே 'நண்பேன்டா'!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யாவுடன் கலக்க வருகிறார் பிரேம்ஜி!
» மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு
» மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு
» மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
» மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum