தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!

Go down

 எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்! Empty எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!

Post  ishwarya Fri Mar 22, 2013 2:14 pm



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் கேயார் ஆதரவாளர்களுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்விடையந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக் குழு பதவி விலக வேண்டும் என கேயார் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பு மறுப்பு தெரிவிப்பதோடு பதவி விலகாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் சங்க வளாகத்தில் கேயார் மற்றும் சந்திரசேகரன் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவரையொருவர் மோதிக் கொண்டனர். இந்த மோதல் கைகலப்பில் முடிவடைந்தது.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கேயார் ஆதரவாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேயார்: நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதவி விலக மறுகின்றனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மேலும் அவர்கள் வரும் 24-ம் தேதி கூட்டியுள்ள சங்க பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 21 பைல்கள் காணாமல் போய் உள்ளன. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டவிரோதமாக பொதுக்குழு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கமிஷனர் அலுவலகத்தில் கேயார் புகார்
»  தயாரிப்பாளர் கேயார் தலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நடவடிக்கை கோரி புகார்
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார்.
» நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum